சோஷியல் மீடியா பிரபலத்தை கரம் பிடிக்கும் ராக்கி சாவந்த்!

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், சோஷியல் மீடியா பிரபலம் தீபக் கலாலை வரும் டிச.30ம் தேதி திருமணம் செய்யவிருக்கிறார்.

மும்பை: பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், சோஷியல் மீடியா பிரபலம் தீபக் கலாலை வரும் டிச.30ம் தேதி திருமணம் செய்யவிருக்கிறார்.

பாலிவுட்டில் இந்த ஆண்டு நவபர், டிசம்பர் மாதங்கள் திருமண நிகழ்ச்சிகளாக நடந்து வருகின்றனர். தீபிகா ரன்வீர் திருமணம், பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் திருமணம், டிவி ஷோ தொகுப்பாளர் கபில் ஷர்மா திருமணத்தை தொடர்ந்து நடிகை ராக்கி சாவந்த் திருமணமும் நிச்சமயமாகியுள்ளது.

பாலிவுட்டில் கிளாமர் குயீனாக வலம் வரும் ராக்கி சாவந்த்(40), தமிழில் ‘முத்திரை’, ‘என் சகியே’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். இவர் தற்போது, ஹிந்தி டிவி நிகழ்ச்சி மற்றும் சோஷியல் மீடியா பிரபலமான தீபக் கலாலை திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on

ராக்கி சாவாந்த்-தீபக் கலால் திருமணம் இந்த ஆண்டின் கடைசி நாளான டிச.31ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இவர்களது திருமணத்தில் பாலிவுட் திரை பிரபலங்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, கடந்த 2009ம் ஆண்டு, பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட சுயம்வரம் என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ராக்கி, அதில் ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்வதாக அறிவித்தார். அதன்படி, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 15 போட்டியாளர்களில் எலிஸ் என்பவரை ராக்கி தேர்தெடுத்தார். அவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...