Home இந்தியா சொன்ன சொல் தவறாத‌ கோட்டைச்சாமி! தேர்தல் தோல்விக்காக ஜீவசமாதியானாரா பாபா?

சொன்ன சொல் தவறாத‌ கோட்டைச்சாமி! தேர்தல் தோல்விக்காக ஜீவசமாதியானாரா பாபா?

தன்னுடைய யாகத்தின் வலிமையால் வேட்பாளரை தேர்தலில் வெற்றிபெற வைப்பதாகவும், அப்படி தன் ஆதரவு பெற்ற வேட்பாளர் வெற்றிப்பெறவில்லை என்றால், ஜீவசமாதி அடைவதாகவும் அறிவித்த கம்ப்யூட்டர் பாபாவை மீடியாக்கள் வலைவீசி தேடிவருகின்றன.

சொன்ன சொல் தவறாத‌ கோட்டைச்சாமி! தேர்தல் தோல்விக்காக ஜீவசமாதியானாரா பாபா?

தன்னுடைய யாகத்தின் வலிமையால் வேட்பாளரை தேர்தலில் வெற்றிபெற வைப்பதாகவும், அப்படி தன் ஆதரவு பெற்ற வேட்பாளர் வெற்றிப்பெறவில்லை என்றால், ஜீவசமாதி அடைவதாகவும் அறிவித்த கம்ப்யூட்டர் பாபாவை மீடியாக்கள் வலைவீசி தேடிவருகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் சர்ச்சைகளுக்கு பெயர்போன சாத்வி பிரக்யாசிங்கை பாஜக போபால் வேட்பாளராக அறிவிக்க, காங்கிரஸ் தன்னுடைய மூத்த தலைவர் திக் விஜய் சிங்கை களம் இறக்கியது.

Vairagyanand

சக பாபாவான சாத்வியை எதிர்க்கவும் தயாரான பஞ்சயதி நிரஞ்சனி அகாடாவைச் சேர்ந்த மகாமணடலேஸ்வரர் சுவாமி வைரக்யானந்த் என்ற பாபா, காங்கிரஸ் வேட்பாளர் திக் விஜய்சிங்கை தீவிரமாக ஆதரித்தார். எந்தளவு கொள்கை பிடிப்பு கொண்டவரென்றால், அவரின் வெற்றிக்காக கிலோகணக்கில் நெருப்பில் மிளகாய் போட்டு யாகம் செய்தார். எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற கணக்கில் திக் விஜய் சிங்கும் குடும்பத்துடன் யாகத்தில் கலந்துகொண்டார்.

Prayers Offered

புகையோடு சேர்ந்த மிளகாய் காரம் காரணமாக மந்திரத்தை தவறாக சொல்லிவிட்டாரோ என்னவோ, தேர்தல் முடிவு அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக வந்ததுவிட்டது. திக் விஜய் சிங்கைவிட 3 லட்சத்து 64ஆயிரம் வாக்குகளுக்கும் மேலாக பெற்று சாத்வீ வெற்றிபெறவும், நம்ம பாபாவுக்கு ஷாக் அடித்துவிட்டது. “நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னதைப் போய் சீரியஸா யாராச்சும் எடுத்துக்குவாங்களா, அதுவும் சாத்வீ நம்ம புள்ளையாச்சே” என எஸ்கேப் ஆவார் என்றுப் பார்த்தால், அதுதான் இல்லை. பாபாவை காணவில்லை. ஒருவேளை சொன்ன சொல்ல தவறாமல் ஜீவசமாதி அடைந்துவிட்டாரோ என்னவோ? பாபாவின் பெயர் வேறு வைராக்யானந்த். சொன்ன சொல் தவற மாட்டான் இந்த கோட்டைச்சாமின்னு எங்கேயும் கிளம்பிவிட்டாரோ என மீடியாக்கள் தேட ஆரம்பித்துவிட்டன. அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை டெப்பாசிட் இழக்க வைக்கவில்லை என்றால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சொன்ன அமைச்சர் விஜய பாஸ்கர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
 

சொன்ன சொல் தவறாத‌ கோட்டைச்சாமி! தேர்தல் தோல்விக்காக ஜீவசமாதியானாரா பாபா?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

எங்கள கேக்காம திருவிழா நடத்துறீங்களோ… பட்டியலின மக்களை காலில் விழவைத்த ஊர்மக்கள்!

சாதி மதம் இனம் கடந்து மக்கள் சகஜமாக ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகி வரும் இக்காலகட்டத்தில் கூட, தமிழகத்தின் பல இடங்களில் இன்னமும் பட்டியலின மக்கள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி...

மோடிக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி!

தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை அதிகரித்து வழங்க வேண்டுமென பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை எதிர்பாராத...

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்கும் தமிழ்நாடு அரசு!

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை அறிவியலாளர்களும் ஆட்சியாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை...

கொரோனாவால் இறந்த மூதாட்டி : தகனம் செய்வதற்கு முன் எழுந்ததால் அதிர்ச்சி!

கொரோனா தொற்றால் இறந்ததாக மூதாட்டி ஒருவரை தகனம் செய்ய சென்ற போது எழுந்து உட்கார்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisment -
TopTamilNews