சொன்னா கேளுங்க, இவங்க தான் ஜெயிக்க போறாங்க: பிரபல நடிகையின் தேர்தல் கருத்து கணிப்பு!

மக்களவை தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைக்  கண்டித்துள்ளார் நடிகை கஸ்தூரி. 

சென்னை:  மக்களவை தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைக்  கண்டித்துள்ளார் நடிகை கஸ்தூரி. 

vote

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி மக்களவைத் தேர்தல் நேற்று மாலை  ஆறு மணியுடன் நிறைவடைந்தது. இதன் காரணமாக தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.  பலவேறு தொலைக்காட்சிகள், செய்தி நிறுவனங்கள்  மக்களிடம் நேரடியாகவோ அல்லது வலைதளம்  மூலமாகவோ கருத்துக்  கணிப்பு நடத்தி அதற்கான முடிவை வெளியிட்டு வருகின்றன. 

 

இந்நிலையில் சமூகவலைத்தள  போராளி  கஸ்தூரியும், தன்  பங்கிற்குக் கருத்துக் கணிப்பை அள்ளி  தெறிக்கவிட்டுள்ளார். அதில், வயநாடு மற்றும் அமேதி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ராகுல்காந்தி வெற்றி பெறுவார் என்றும் வாரணாசியில் பிரதமர் மோடி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

gamnhir

மேலும் டெல்லி கிழக்கு தொகுதியில் கவுதம் காம்பீரை ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி மெர்லெனா தோற்கடிப்பார், தென்சென்னையில் ஜெயவர்தனும், மத்திய சென்னையில் தயாநிதி மாறனும், வடசென்னையில் கலாநிதி வீராசாமியும் வெற்றி பெறுவார்கள் என்றும் கணித்துள்ளார். 

ponnar

தொடர்ந்து பதிவிட்டுள்ள அவர், கோவையில் பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணனும், மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் வெங்கடேசனும், தூத்துக்குடியில் கனிமொழியும், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரமும், திண்டுக்கல்லில் திமுகவின் வேலுசாமியும் வெற்றி பெறுவார்கள் என்றும் கன்னியாகுமரியில் பொன்ராதாகிருஷ்ணனும் வசந்தகுமாரும் கிட்டத்தட்டச் சமநிலையில் இருப்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைக் கணிக்க முடியாத நிலை உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார். 

rahul modi

தேசிய அளவில் பாஜக கூட்டணி 230 முதல் 260 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 90 முதல் 110 தொகுதிகளிலும், மற்றவை 130 முதல் 180 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் தமிழகத்தில் அதிமுக கூட்டணி 10 முதல் 15 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 25 முதல் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் கஸ்தூரி கூறியுள்ளார்.   கஸ்தூரியின் இந்த கருத்துக் கணிப்புக்கு வலைதள வாசிகள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

Most Popular

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...

சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் பெரும்பாலும் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் அதிகமாக பாதக்கப்படுகின்றனர். குறிப்பாக காவலர்களும் மருத்துவர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் கொரோனாவால் எளிதில் பாதிப்படைகின்றனர். இதனிடையே நலத்திட்ட...

குடும்ப செட்அப்பில் பாலியல் தொழில்; கொள்ளை புகாரால் வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் சீக்ரெட் – போலீஸ் என மிரட்டும் கும்பல்!

சென்னை, செங்குன்றம் பாடியநல்லுர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (பெயர் மாற்றம்). லாரி டிரைவர். இவர் குடும்பத்தினரோடு கடந்த 5-ம் தேதி வீட்டில் இருந்துள்ளார். அப்போது பைக்கில் கும்பலாக சிலர் வந்துள்ளனர். அவர்கள் பிரகாஷின்...