Home ஆன்மிகம் சொந்த வீடு கனவுக்கு இதெல்லாம் செய்தால் ஏற்றம்!

சொந்த வீடு கனவுக்கு இதெல்லாம் செய்தால் ஏற்றம்!

இன்று நிச்சயமாக கோயிலுக்குச் சென்று கந்தவேலனைத் தரிசித்து அவனது அருளைப் பெறுங்கள். 

சொந்த வீடு கனவுக்கு இதெல்லாம் செய்தால் ஏற்றம்!

“ஆடி வந்தால் நல்லவை யாவும் தேடி வரும்” என்பது நமது முன்னோர்களின் வாக்கு. வருஷத்துல வேற எந்த மாசத்திலும் இல்லாத அளவிற்கு இந்த ஒரு மாசம் மட்டும் அதிகளவு தெய்வங்களை வழிபடுவதற்குரிய சிறப்பான நாட்கள் வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று தான் முருகப் பெருமானின் வழிபாட்டிற்குரிய “ஆடி கிருத்திகை”. 

நமது டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக, அற்புதமான இந்த ஆடி கிருத்திகை நாளின் சிறப்புகள் குறித்தும், இன்றைய நாளில் முருகனின் அருளை பெறும் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் இருக்கும் முறை குறித்தும் தருகிறோம். இன்று நிச்சயமாக கோயிலுக்குச் சென்று கந்தவேலனைத் தரிசித்து அவனது அருளைப் பெறுங்கள். 

murugan

சிவபெருமானின் அருளால் தோன்றியவர் முருகன். ஆறு கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார் முருகப்பெருமான். அந்த கார்த்திகை பெண்களை கெளரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் “கார்த்திகை” நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தில் முருகப்பெருமானை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. 

வருடத்தில், தை மாதத்தில் வரும் கிருத்திகையும், ஆடி ம் மாதத்தில் வரும் கிருத்திகையும் மிகவும் விசேஷமான நாட்களாகும்.  பொதுவாக ஆடிக் கிருத்திகை தினத்தன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படும். இந்த தினத்தில் முருக பக்தர்கள் காவடி சுமந்து, தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்துகின்றனர்.

murugan

இந்த ஆடி கிருத்திகை தினத்தன்று, குளித்து முடித்து விட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறு கோண கோலத்தைப் போட்டுக் கொள்ள வேண்டும். பின்பு முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பூக்கள் மற்றும் பழங்களை நிவேதனம் வைத்து உணவு மற்றும் நீர் எதுவும் அருந்தாமல் “கந்த சஷ்டி கவசம்” அல்லது “சண்முக கவசத்தை” மனமொன்றி படிக்க வேண்டும். சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இந்நாள் முழுவதும் உப்பு சேர்க்கப்படாத உணவை,  உண்டு மாலையில் உங்களுக்கு அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

murugan

இந்த ஆடி கிருத்திகை விரதத்தால் உங்களின் கர்ம வினைகள் நீங்கும். செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுதலான திசை நடப்பவர்களுக்கு தீமையான பலன்கள் ஏற்படாமல் காக்கும். திருமண தடைகள் அகலும். சொந்த வீடு கனவு நிறைவேறும். மொத்தத்தில் முருகனின் முழுமையான அருள் கிட்டும்

சொந்த வீடு கனவுக்கு இதெல்லாம் செய்தால் ஏற்றம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

கொரொனா பரவலால் தமிழக பள்ளி, கல்லூரி மானவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

’’பொய் சொன்னா அறைவேன் என்று சொன்ன நடிகர் சித்தார்த் எங்கே?’’

16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியது. புதிய ஆசி பொறுப்பேற்ற பின்னர் நடைபெறம் இந்த முதல் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையில் இடம்பெற்றிருப்பது குறித்து...

தளபதி 65 படத்தின் தலைப்பு அறிவிப்பு

நடிகர் விஜய் 65வது படத்தின் First Look வெளியானது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது...

இதுவரை தமிழ்நாட்டில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள் என தெரியுமா? – அரசு வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று...
- Advertisment -
TopTamilNews