கரூர் மாவட்ட நூலகத்தில் போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் வசதிக்காக தன்னுடைய சொந்த செலவில் ஏ.சி ஒன்றை வாங்கிக்கொடுத்த கரூர் கலெக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கரூர் மாவட்ட நூலகத்தில் போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் வசதிக்காக தன்னுடைய சொந்த செலவில் ஏ.சி ஒன்றை வாங்கிக்கொடுத்த கரூர் கலெக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கரூர் திருவள்ளுவர் மைதானம் அருகே கரூர் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு என்று சிறப்பு பகுதி செயல்பட்டு வருகிறது. தனியார் பயிற்சி மையங்களை விட இங்கு தரமாக உள்ளதாக மாணவர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், கரூர் மாவட்ட மைய நூலகத்தில் 52வது தேசிய நூலக வார விழா நடந்தது. அப்போது, தன்னுடைய சொந்த செலவில் வாங்கிக் கொடுத்த அமைக்கப்பட்ட ஏ.சி-க்களை திறந்து வைத்தார். மேலும், மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்த விழாவில் பார்வையற்ற மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை ஒலி வடிவில் பதிவு செய்து தரும் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ தன்னார்வலர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வசதியாக ஏ.சி-க்களை வாங்கிக்கொடுத்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மாணவர்கள் நன்றி கூறினர். கலெக்டரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.