Home லைப்ஸ்டைல் சொட்டைத் தலை அழகை குறைக்கிறதா? வழுக்கையை மறைக்க அற்புத மூலிகை போதும் !

சொட்டைத் தலை அழகை குறைக்கிறதா? வழுக்கையை மறைக்க அற்புத மூலிகை போதும் !

தலைமுடி உதிர்ந்து ஏற்படும் வழுக்கையை சரி செய்ய ஊமத்தங்காய் அதிக பங்கு வகிப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கிறது.
முடி சொட்டையானவர்கள் எந்த பக்கவிளைவும் இல்லாத சக்தி வாய்ந்த மூலிகைகள் இருப்பதாக சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

bald

.

பிஞ்சு ஊமத்தைங்காயை அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்து வாருங்கள். வாரம ஒருமுறை செய்து வந்தால் சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரும். தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு எல்லாம் மறைந்து முடி வளர ஆரம்பிக்கும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அவுரி இலை பொடி நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்காக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. முடியின் வளர்ச்சியையும் தூண்டும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன

hair

.
 
அவுரி இலையுடன், மருதாணி இலையை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் செம்பட்டை முடி கருமையாக மாறும். 
எலுமிச்சை பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் எல்லாகற்றையும் சமமாக அரைலிட்டர் அளவு எடுத்து ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி ஆறு மாதத்திற்குமேல் தலைமுடியில் தேய்த்து வந்தால் நரை முடி குறையும்.

தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூவை நன்றாக காய வைத்து போட்டு அதனுடன் துளசி விதை மற்றும் வெட்டிவேர் இரண்டையும் சேர்த்து போட்டு நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு குறையும்.
10 பாதாம் பருப்பை எடுத்து 3 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.

படிகாரத்தை 20 கிராம் எடுத்துப் பொடியாக்கி தண்ணீரில் கரைத்து தலையில் தேய்த்து ஒன்று அல்லது 2 மணி நேரம் சென்றபின் சீயக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை வராது 

hairloss

வெந்தயத்தை எடுத்து தேங்காய் பாலில் நன்றாக ஊறவைத்து நன்றாக விழுதுப் போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.

சப்பாத்திக் கள்ளியின் சிவந்த பூக்களில் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயில் அந்த சாறை கலந்து எண்ணெயை காய்ச்ச வேண்டும். இதனை தலையில் தேய்த்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘அழிவின் விளிம்பில் கோவில்கள்’ : பக்தர்களிடம் ஒப்படைக்க சத்குரு வலியுறுத்தல்!

கோவில்களை பாதுகாக்க பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 11,999...

விசைப்படகு சிறைபிடிப்பை கண்டித்து, தூத்துக்குடி துறைமுக மீனவர்கள் வேலைநிறுத்தம்!

தூத்துக்குடி இடிந்தகரை மீனவர்களால் படகு சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடி துறைமுக மீனவர்கள் இன்று வேலைறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில்...

இலவச கொரோனா தடுப்பூசிக்கான Co-WIN 2.0 செயலி: எவ்வாறு பதிவுசெய்வது? – முழு விவரம் உள்ளே!

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதற்கான முதற்கட்டம் ஜனவரி 16ஆம் தேதி ஆரம்பித்தது. முன்களப் பணியாளர்களும் சுகாதாரத் துறையினரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுவருகிறது. இந்த முதற்கட்ட...

இது வேற லெவல் அரசியல் ; ரஜினிக்கு நன்றி சொன்ன அர்ஜூனமூர்த்தி

ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதாக சொன்னதும் பாஜகவில் இருந்து விலகி வந்தார் அர்ஜூனமூர்த்தி. அவருக்கு, ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பும் கொடுத்தார் ரஜினிகாந்த். ஆனால், சில காரணங்களால் ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று,...
TopTamilNews