செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தியில் 7 ஆண்டுகளில் இல்லாத சரிவு! பா.ஜ.க. அரசுக்கு அடி மேல் அடி!

கடந்த செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தி 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.3 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய புள்ளியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகிய முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 2019 செப்டம்பரில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.2 சதவீதம் குறைந்து இருந்தது. அதனால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தியும் குறைந்துதான் இருக்கும் என நிபுணர்கள் கணித்து இருந்தனர். தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதில் முக்கிய 8 துறைகளின் பங்கு 40 சதவீதம் உள்ளது. அதனால் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி குறைந்தாலும், ஏற்றம் கண்டாலும் அதன் தாக்கம் தொழில்துறை உற்பத்தியில் வெளிப்படும்.

தொழில்துறை

கடந்த செப்டம்பர் மாத தொழில்துறை உற்பத்தி குறித்து புள்ளிவிவரத்தை மத்திய புள்ளியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. எதிர்பார்த்த மாதிரியே அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது. அதுவும் 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தி 4.3 சதவீதம் சரிவு கண்டுள்ளது. பொருளாதார மந்தநிலை காரணமாக தொழில்துறை உற்பத்தி சரிவு கண்டுள்ளது. 2018 செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தி 4.6 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

தொழில்துறை

ஏற்கனவே பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுதான் காரணம் என எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில், கடந்த செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தி குறைந்துள்ளதால் அவை இன்னும் கடுமையாக  விமர்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 

Most Popular

ஆந்திர அரசு மருத்துவமனையில் நோயாளியின் சடலத்தை சாப்பிடும் நாய்கள்… சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

தெலங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர அரசு மருத்துவமனை நிர்வாகம் தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில்: இது மனதை உலுக்கும்!...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

இன்றைய ராசிபலன்கள் 12-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...

கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில்...

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியல்...
Do NOT follow this link or you will be banned from the site!