Home ஆன்மிகம் சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் லெக்கின்ஸ், டி ஷர்ட் உடைகளுக்கு தடை

சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் லெக்கின்ஸ், டி ஷர்ட் உடைகளுக்கு தடை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு லெக்கின்ஸ் பேண்ட் மற்றும் ஆண்கள் டி ஷர்ட் போன்ற உடைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு லெக்கின்ஸ் பேண்ட் மற்றும் ஆண்கள் டி ஷர்ட் போன்ற உடைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் ஆடை வி‌ஷயத்தில் கவனம் செலுத்தாமல் இஷ்டத்துக்கு உடை அணிந்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2016-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. வேட்டி, சேலை, சல்வார், சுடிதார் போன்ற நாகரீகமான உடைகளை அணிந்து கோவில்களுக்கு செல்ல வேண்டும் என அந்த வழக்கில் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ttn

ஆனால் இந்த உத்தரவை  அனைத்து கோவில்களிலும் கடைபிடிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் லெக்கின்ஸ், டி ஷர்ட் அணிந்து வரக் கூடாது என்றும் வேட்டி, சேலை மற்றும் நாகரீகமான உடைகளை அணிந்து வர வேண்டும் என்றும் கோவில் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதை மற்ற கோவில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews