Home தமிழகம் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே 5 நாட்களுக்கு ரயில் சேவை மாற்றம் !

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே 5 நாட்களுக்கு ரயில் சேவை மாற்றம் !

இன்று முதல் 5 நாட்களுக்குச் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழியே இயங்கும் ரயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ரயில்களில் தினந்தோறும் பல்லாயிரக் கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ள கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் பொறியியல் பணி நடைபெறுவதால் இன்று முதல் 5 நாட்களுக்குச் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழியே இயங்கும் ரயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

Train

மாற்றப்பட்ட ரயில்களின் விவரங்கள்:

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை:  இரவு 10.15, 11.10 மணிக்குச் செல்லும் ரயில்கள் செங்கல்பட்டிலிருந்து இயங்காது. தாம்பரத்திலிருந்து கடற்கரை வரை இயங்கும். 

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு : இரவு 8.01, 9.18 மணிக்குச் செல்லும் ரயில்கள் செங்கல்பட்டு வரை செல்லாது. தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். 

Train

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு: அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50, காலை 6.05, 6.43, மாலை 5.18, இரவு 8.01, 9.18 ஆகிய மின்சார ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும். தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டிற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை:  அதிகாலை 3.55, 4.35, 4.50, காலை 6.40, 6.55, இரவு 7.25, 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயங்கும் ரயில்கள் செங்கல்பட்டிலிருந்து இயங்காது. தாம்பரம் முதல் சென்னை கடற்கரைவரை மட்டுமே இயங்கும். 

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே காலை 8:40 மணிக்கு இயக்கப்படும் செமி பாஸ்ட் மின்சார ரயில் ரத்து செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

“மனதை வருடும் குரல்” : பாடகியாக அறிமுகமான ரஹ்மான் மகள்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ,மகள் கதீஜா ரஹ்மான் இந்தியில்...

நள்ளிரவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி ஓசூர் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்ற தனியார் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 9 பேர் படுகாயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் சேட்டான்டஹள்ளி பகுதியை சேர்ந்த...

பூந்தமல்லி பேருந்து நிலையத்தை சூழ்ந்த மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதி

சென்னை சென்னை பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை...

பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை காணொளி வாயிலாக முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில், ரூ.118.46 கோடி செலவில் 1,143...
Do NOT follow this link or you will be banned from the site!