Home தமிழகம் சென்னையில் தாறுமாறாக காரை ஓட்டிய கல்லூரி மாணவனுக்கு தர்ம அடி!

சென்னையில் தாறுமாறாக காரை ஓட்டிய கல்லூரி மாணவனுக்கு தர்ம அடி!

சென்னை: சென்னையில் தாறுமாறாக காரை ஓட்டி சாலையில் நடந்து சென்றவர்கள் மீது ஏற்றிய கல்லூரி மாணவனை அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

சென்னை வில்லிவாக்கம் அடுத்த ஐ.சி.எஃப் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த விஜயலட்சுமி மற்றும் அவரது உறவினரின் 6 வயது சிறுமி சிந்து ஆகியோர் மீது கார் ஒன்று மோதியது.

மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர், காரை ஓட்டி வந்த இளைஞனை சுற்றி வளைத்த பொதுமக்கள், சரமாரியாக அடித்து உதைத்தனர். இளைஞனை போலீசில் ஒப்படைத்து விடலாம் என்று சமாதானம் பேசி தடுக்க முயன்ற ஒருவருக்கும் சரமாரியாக அடி விழுந்துள்ளது.

இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் அங்கு வந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார், இளைஞனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் படிக்கும் சரண் என்பதும், இவரும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

பணியிடங்கள் நிரப்புவதிலும் கோலுமாலு! உச்சநீதிமன்றம் காட்டம்!!

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பொது பிரிவில் சேர்க்காமல் மிகவும் பிற்படுத்த மற்றும் சீர் மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் சேர்த்ததற்கு உச்சநீதிமன்றம்...

மூன்று லேயர் மாஸ்க் அணிந்து கொரோனா பரவலைத் தடுத்திடுங்கள்! – நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனா பரவலைத் தடுக்க முகக் கவசம், பொது சுகாதாரம், சமூக இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது. இதைப் புறக்கணித்ததின் விளைவு புது புது வீரியம் மிக்க கொரோனா வந்து அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது....

கள்ளக்காதல் ஜோடி ஏரியில் விழுந்து தற்கொலை… உறவினர்கள் எதிர்ப்பால் விபரீத முடிவு…

சேலம் சேலம் அருகே கள்ளக்காதல் ஜோடி ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம்...

கமலுக்கு வைத்திருந்ததை எடுத்து வைகோ, திருமாவுக்கு கொடுத்த ஸ்டாலின்!

மக்கள் நீதி மையத்தை திமுக கூட்டணிக்கு கொண்டுவர உதயநிதி ஸ்டாலினும், ஸ்டாலின் மருமகன் சபரீசனும் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியானதை கமல்ஹாசனும் உறுதிப்படுத்தினார். ஆனால் தூது அனுப்புவது எல்லாம்...
TopTamilNews