Home தமிழகம் சென்னையில் சிக்னல் கோளாறால் நேர இருந்த பெரும் விபத்தை தவிர்த்த ஓட்டுநர்: நடந்தது என்ன?

சென்னையில் சிக்னல் கோளாறால் நேர இருந்த பெரும் விபத்தை தவிர்த்த ஓட்டுநர்: நடந்தது என்ன?

சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்குப் புறப்பட்ட ரயில், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்தில் இருந்து தப்பித்துள்ளது.

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்குப் புறப்பட்ட ரயில், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்தில் இருந்து தப்பித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து கடந்த புதன் இரவு 8.20மணிக்கு மங்களூர் மெயில் புறப்பட்டுள்ளது. அந்த ரயில், சென்னை பேசின்பிரிட்ஜ் நிலையத்துக்கு முன் வந்தபோது, ரயில் செல்ல வேண்டிய திசை வலப்புறமாகக் காட்டியபடி கிரீன் சிக்னல் எரிந்துள்ளது.

ஏதோ கோளாறாக இருப்பதை உணர்ந்த ரயில் ஓட்டுநர், உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு பேசின்பிரிட்ஜ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சிக்னலில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, 8.45 மணிக்கு அங்கிருந்து மங்களூர் மெயில் ரயில் புறப்பட்டுச் சென்றுள்ளது.

ஒருவேளை, ரயில் தடம்மாறி சென்றிருந்தால் பெரும் விபத்து நேர்ந்திருக்கும். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால், நடைபெற இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கவனக்குறைவு குறித்து ரயில்வேயின் சிக்னல் தொலைத்தொடர்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  

மாவட்ட செய்திகள்

Most Popular

விஜய் கட்சி தொடங்க நெருக்கடி: மொட்டை அடித்து ரசிகர்கள் பிரார்த்தனை

விஜய்யை வைத்து அரசியல் கட்சி தொடங்குவதாத அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்ததால் பல்வேறு சர்ச்சை எழுந்தது. தனது ஆலோசனை இல்லாமல் தந்தை தனது விருப்பப்படி செய்கிறார். அதில் எனக்கு எந்த...

கொடைக்கானல் மலைப்பாதையில் வாகனங்களுக்கு தடை!

புரெவி புயல் காரணமாக கொடைக்கானல் மலைப்பாதையில் இன்று இரவு முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. நிவர் புயலைத் தொடர்ந்து, தென் வங்கக்கடலில் புரெவி புயல்...

“வெளியே ஆபீசு ,உள்ளே ஆபாசம்..” -நிறுவன போர்டில் நடந்த விபச்சார நிலையம்.

ஒரு நிறுவன போர்வையில் ஒரு வீட்டிற்க்குள் பாலியல் தொழில் நடத்தியதன் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர் . மகாராஷ்டிராவின் மீரா...

ஆன்மீக அரசியல்தான்… ரஜினி உறுதி

முப்பது ஆண்டுகாலமாக சஸ்பென்ஸ் வைத்துக்கொண்டே வந்த ரஜினிகாந்த், கடந்த 2017ம் ஆண்டில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், தனது அரசியல் ஆன்மீக அரசியல்தான் என்றும் தெரிவித்தார். ரஜினி...
Do NOT follow this link or you will be banned from the site!