Home தமிழகம் சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்ட 158 பேர்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்ட 158 பேர்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

மாநகராட்சி நிர்வாகம், பாதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 27,892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 872 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1900ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அதனால் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பாதிப்படைந்த பல்வேறு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் மாநகராட்சி நிர்வாகம், பாதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

ttn

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 158 பேர் குணமடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ,மேலும், ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம்,அடையாறு, வளசரவாக்கம்  உள்ளிட்ட அனைத்து மண்டலங்களிலும் சேர்த்து தற்போது 352 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை சென்னையில் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 495 ஆக இருந்த நிலையில், இன்று கொரோனா பாதிப்பு 352 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

‘பாஸான 70% பேர் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதியவர்கள்’: கல்வியாளர்கள் அதிருப்தி!

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான...

விபத்தில் இறந்த ராணுவ வீரர் உடல் காஞ்சிபுரம் வந்தடைந்தது!

அசாமில் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஏகாம்பரம் உடல் சொந்த ஊரான காஞ்சிபுரம் வந்தடைந்தது. காஞ்சிபுரம் வெள்ளை...

“கொட்டும் ரத்தத்தோடு ,முனகல் சத்தத்தோடு …”-பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கிடந்த பெண் நாய்

மும்பையின் போவாய் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் ‘நூரி’ என்ற எட்டு வயது பெண் நாய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கிடந்தது .

சென்னை திநகர் நகைக்கடையில் கொள்ளை : திருவள்ளூர் கொள்ளையனின் காதலியிடம் விசாரணை!

சென்னை தி.நகர் நகைக்கடையில் கொள்ளையடித்தது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள மூசா தெருவில் இயங்கி வந்த உத்தம் நகைக் கடையில்...
Do NOT follow this link or you will be banned from the site!