Home தமிழகம் சென்னையில் உணவு விநியோகம் செய்த ஊழியருக்கு கொரோனா – கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் உணவு விநியோகம் செய்த ஊழியருக்கு கொரோனா – கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் உணவு விநியோகம் செய்த ஊழியருக்கு கொரோனா – கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் உணவு விநியோகம் செய்த ஊழியருக்கு கொரோனா – கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னையில் உணவு விநியோகம் செய்த ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று நோயால் இதுவரை தமிழகத்தில் 25 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 2058 பேர் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 1128 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலும் சாலைகளில் உணவு விநியோகம் செய்யும் நபர்களையே அதிகமாக காண முடிகிறது. அவர்கள் மூலமாகவும் கொரோனா பரவல் நிகழ வாய்ப்பிருப்பதாக சமூக வலைதளங்களில் சிலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

ttn

இந்த நிலையில், சென்னையில் உணவு பொருட்களை வீட்டுக்கு வந்து விநியோகம் செய்யும் தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 26 வயது கொண்ட அந்த இளைஞர் தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவர் அண்மையில் 130 பேருக்கு உணவு பொட்டலங்களை விநியோகம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அந்த 130 பேரையும் கண்டறியும் பணியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் உணவு விநியோகம் செய்த ஊழியருக்கு கொரோனா – கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம்!

மூன்றுநாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து ஊட்டி புறப்பட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி...

கையில் அரிவாளுடன் குத்தாட்டம்; வைரலான வீடியோவால் சிக்கிய இளைஞர்!

தூத்துக்குடி அருகே கையில் அரிவாளுடன் சினிமா பாட்டுக்கு நடனமாடிய இளைஞர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் கையில் அரிவாளுடன் சினிமா பாடல்...

‘குற்ற உணர்ச்சி’… தோழி உயிரிழந்ததை அறிந்து கதறிய யாஷிகா ஆனந்த்!

விபத்தில் தோழி உயிரிழந்ததை அறிந்த நடிகை யாஷிகா ஆனந்த் உயிருடன் வாழவே குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். கடந்த...

நாளை முதல் ஆக. 10ஆம் தேதிவரை ஊரடங்கு!

பெரம்பலூரில் நாளை முதல் வருகின்ற 10ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள்...
- Advertisment -
TopTamilNews