Home அரசியல் சூலூர் அதிமுக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்

சூலூர் அதிமுக எம்.எல்.ஏ மாரடைப்பால் திடீர் மரணம்

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

கோவை :

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 64 . 

கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் போட்டியிட்டு 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இன்று காலை எம்எல்ஏ கனகராஜ் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். காலையில் அவர் செய்தித்தாள் வாசித்துக் கொண்டு இருந்த போதே நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது.

இதையடுத்து மருத்துவமனைக்கு செல்லும் முன்னே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே மரணம் அடைந்தார்.

இவரது உடல் சுல்தான்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.  அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் எம்எல்ஏ கனகராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘பாகிஸ்தான் வீரர் ஏன் தனிமைப்படுத்த படவில்லை’ – LPL சர்ச்சை

இலங்கையில் கடந்த எட்டாண்டுகளாக எல்.பி.எல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் ஐந்து அணிகள் தங்களுக்கு மோதி அரையிறுதிக்குத் தகுதி பெறும். அவற்றில் இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

திமுகவை நம்பி பயனில்லை – கமலுடன் ரகசிய பேச்சு நடத்தும் காங்கிரஸ் ?

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் களத்துக்கு ஆடுபுலி ஆட்டம் தொடங்கி உள்ள நிலையில், கூட்டணி கணக்குகளும் லாப நட்டத்தை நோக்கி நகர்கின்றன. வழக்கத்தைவிட வரும் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பலத்த...

‘கோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி’ – எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி முதல்வர் தகவல்!

இரண்டாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் வெற்றி அடைந்ததால், அடுத்த வாரம் 3ம் கட்ட பரிசோதனை தொடங்கவிருப்பதாக எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி முதல்வர் சுந்தரம் தெரிவித்துள்ளார். உலக நாடுகளை...

சினிமா ஷூட்டிங் பங்களாக்களை வாடகைக்கு எடுத்து வங்கிகளை ஏமாற்றிய கும்பல்

சென்னையில் சினிமா ஷூட்டிங் பங்களாக்களை வாடகைக்கு எடுத்து சொந்த பங்களாக்கள் என்று கூறி, வாடகை கார்களையும் வைத்துக்கொண்டு பிசினஸ் மேன்கள் என்று பொய் சொல்லி, பல வங்கிகளில் மோசடி செய்த...
Do NOT follow this link or you will be banned from the site!