Home சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிறப்பு விருது: மத்திய அரசு அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிறப்பு விருது: மத்திய அரசு அறிவிப்பு!

அபூர்வ ராகங்கள்  படத்தில் அறிமுகமாகி இதுவரை 160ற்கும் மேற்பட்ட படங்களில் 
 நடித்து வருகிறார்.

புதுடெல்லி:  திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது ஒன்று அறிவித்துள்ளது. 

rajini

நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள்  படத்தில் அறிமுகமாகி இதுவரை 160ற்கும் மேற்பட்ட படங்களில் 
 நடித்து வருகிறார். இந்நிலையில் திரையுலகிற்குச் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE என்ற விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். 

 கோவாவில்  நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட விருது விழாவில் இந்த விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இதனால் ரஜினிக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். 

 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

’பீகாருக்கு ஓவைசி… தமிழ்நாட்டுக்கு ரஜினியா?’ பின்புலத்தில் யார்?

இதோ…. அதோ… என்று கால் நூற்றாண்டாக எதிர்பார்த்துகொண்டிருந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் நடந்தே விட்டது. ரஜினி தனது அதிகாரபூர்வப் பக்கத்தில் ஜனவரியில் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துவிட்டார். கட்சி தொடர்பான...

“சிங்கிள்னு சொல்லி என்னை சிதைக்க பார்த்தியே” -பெண் பொறியாளரிடம் சிக்கிய அதிகாரி

கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடத்தும் ஒரு தனியார் நிறுவன அதிகாரி, தன்னை பேச்சலர் என்று கூறி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயன்றதால்...

சும்மா அதிருதுல்ல… இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது.. #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல

ஜனவரி மாதத்தில் கட்சி தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் இன்று அறிவித்திருக்கிறார். டுவிட்டர் மூலமாக அறிவித்த ரஜினிகாந்த்,மாத்துவோம்எல்லாத்தையும்மாத்துவோம், இப்போஇல்லேன்னாஎப்பவும்இல்ல என்ற ஹேஷ்டேக்குகளை ஷேர் செய்திருந்தார். இந்த இரண்டு ஹேஷ்டேக்குகளில் , இப்போஇல்லேன்னாஎப்பவும்இல்ல...

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விபத்து: 7 வயது சிறுமி பரிதாப மரணம்!

புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டிருக்கும் புரெவி புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில்...
Do NOT follow this link or you will be banned from the site!