Home சினிமா சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் வாழ்த்து: தல ரசிகர்களிடம் சிக்கிய கஸ்தூரி!

சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் வாழ்த்து: தல ரசிகர்களிடம் சிக்கிய கஸ்தூரி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி நடிகை கஸ்தூரி தல அஜித் ரசிகர்களின் வார்த்தை வசையில் வசமாக சிக்கினார்.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி நடிகை கஸ்தூரி தல அஜித் ரசிகர்களின் வார்த்தை வசையில் வசமாக சிக்கினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 69வது பிறந்தநாளை நேற்று (டிச.12) கொண்டாடினார். ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு பரிசாக தன்னுடைய சேரிட்டியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை லைகா நிறுவனத்தின் உதவியுடன், ‘2.0’ திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி தனக்கு மனதில் தோன்றுவதை யோசிக்காமல் பேசுவது வழக்கம். இந்நிலையில் தல அஜித் ரசிகர் ஒருவர், நேற்று பாரதியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறவில்லை ஆனால், நடிகராகிய ரஜினிக்கு மட்டும் வாழ்த்து கூறுகிறீர்களே என்று ஆபாச வார்த்தையால் கஸ்தூரியை சாடினார்.

இதனால் கடுப்பான கஸ்தூரி, அவருக்கு பதிலளிக்கும் விதமாக, ட்விட்டர்ல மாலை போடுவது எப்படி என்று அறிய வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள் அதிமேதாவி அண்ணன் அஜித்தின் ஒரே தம்பிதல’ (வலி) செந்தில்குமார் ! இதனால் அஜித்தின் பல ரசிகர்களும் கஸ்தூரியை சகட்டுமேனிக்கு வசைபாடி வருகின்றனர்.

பின் நடிகை கஸ்தூரி, அஜித் ரசிகரின் ட்விட்டை பகிர்ந்து, மரியாதை என்றால் என்ன என்பதை இவரிடம் தான் கேட்ட வேண்டும். பாவம் அஜித், பாவம் பாரதி என பதிவு செய்துள்ளார். இதுபோல் அஜித் ரசிகர்கள் சிலர் மோசமாக பேச கஸ்தூரியும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

அலாஸ்கா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்!

வட அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா அலாஸ்கா கடற்கரைப்...

சென்னையில் கனமழை: இருள் சூழ்ந்து காணப்படும் சாலைகள்!

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அண்ணா சாலை, கிரீன்வேஸ் சாலை, வடபழனி,...

உச்சத்தை தொட்ட வெங்காய விலை : கோயம்பேட்டில் ஒரு கிலோ ரூ.110க்கு விற்பனை!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 100 முதல் 110 வரை விற்பனையாகிறது. ரூ. 80க்கு விற்கப்பட்ட ஒரு...

தமிழகத்தில் பரவலாக பலத்த மழை !

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து...
Do NOT follow this link or you will be banned from the site!