Home சினிமா சூப்பர் ஸ்டாருக்கு சிரஞ்சீவி விடுத்த சவால்... வீட்டு வேலை செய்யுங்களே!

சூப்பர் ஸ்டாருக்கு சிரஞ்சீவி விடுத்த சவால்… வீட்டு வேலை செய்யுங்களே!

கொரோனாவால் விதிக்கப்பட்ட ஊரடங்கால், வரலாறு காணாத அளவிற்கு பெரிய அளவில் சினிமா துறை முடங்கியுள்ளது. கோலிவுட் தொடங்கி பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஒட்டுமொத்த உலக சினிமாவும் தற்போது முடங்கியுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் திரை நட்சத்திரங்கள், வீட்டில் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதே சமயம் ஒருவருக்கு ஒருவர் ‘சேலஞ்சுகளை’ விடுத்துக்கொண்டு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். 

 

Here it is Bheem @tarak9999 నేను రోజు చేసే పనులే…ఇవ్వాళ మీకోసం ఈ వీడియో సాక్ష్యం. And I now nominate @KTRTRS & my friend @rajinikanth #BeTheRealMan challenge. pic.twitter.com/y6DCQfWMMm

— Chiranjeevi Konidela (@KChiruTweets) April 23, 2020

 

அந்த வகையில் டோலிவுட் டாப் நட்சத்திரங்களுக்கு மத்தியில் தற்போது #BetheREALMAN என்ற சவால் தற்போது பிரபலமாகிவருகிறது. இயக்குநர் சந்தீப் வங்கா தொடங்கிய இந்த சேலஞ்சை, இயக்குநர் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் செய்து வீடியோவை வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது அந்த லிஸ்ட்டில் சிரஞ்சீவியும் இணைந்துள்ளார். அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது வீட்டை சுத்தப்படுத்தி, தனது அம்மாவுக்கு சுட சுட ஊத்தாப்பாத்தையும் சுட்டுக் கொடுத்தார். மேலும் இதுபோன்று செய்யுமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

சசிகலாவுக்கு வைரஸ் பாதிப்பின் தன்மை குறைந்துள்ளது- மருத்துவமனை அறிக்கை

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூருவிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை காலம் முடிவடைந்ததால் அவர், சிறையிலிருந்து ஜனவரி மாதம் 27ஆம் தேதி...

வரும் 26ஆம் தேதி திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 26 ஆம் தேதி 12 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய...

32 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம்- முதல்வர் பழனிசாமி

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துறையாடலில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி,...

முதலீட்டாளர்களை ஏமாற்றிய இந்த வார பங்கு வர்த்தகம்.. 5 தினங்களில் சென்செக்ஸ் 156 புள்ளிகள் சரிவு..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. சென்செக்ஸ் 156 புள்ளிகள் குறைந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரத்தின்...
Do NOT follow this link or you will be banned from the site!