Home சினிமா சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் அப்டேட்: ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினி; ரசிகர்கள் அதிர்ச்சி!

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் அப்டேட்: ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினி; ரசிகர்கள் அதிர்ச்சி!

என்னுடைய பிறந்தநாளன்று  ரசிகர்கள் யாரும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் அப்டேட்: ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினி; ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை: என்னுடைய பிறந்தநாளன்று  ரசிகர்கள் யாரும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ’பேட்ட’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரம் அருகே இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ரஜினி, கலாநிதி மாறன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இப்படத்தின் பாடல்களை பொதுமக்கள் வெளியிட்டனர். படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ரஜினியின் 165-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நேற்று இதன் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் பேசிய நடிகர் ரஜினி, தனது பிறந்தநாள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில்,’என்னுடைய பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி ரசிகர்கள் யாரும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வர வேண்டாம். வந்தால் ஏமாற்றத்துடன் தான் திரும்பிப் போக நேரிடும். ஏனென்றால் ஆன்மிக தலங்களில் அந்நாளைச் செலவிட செல்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடி  வருகின்றனர்.அதிலும் முக்கியமாக அவரது போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் இந்த அறிவிப்பால்   ரஜினி ரசிகர்கள் ஏமாற்றத்தில் உறைந்துள்ளனர்.

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் அப்டேட்: ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினி; ரசிகர்கள் அதிர்ச்சி!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கடந்த மாதத்திலிருந்து ஏற்ற, இறக்கத்தை சந்தித்து ரூ.36 ஆயிரத்திலேயே நீட்டித்து வந்தது....

கிரீமிலேயர் வரம்பு: வேளாண் வருமானம்சம்பளத்தை கணக்கில் சேர்க்கக் கூடாது!

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்க கிரீமிலேயர் முறையை அகற்றுவது குறித்தும் ஆராய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர்...

கோவையில் பிளாஸ்டிக் கடையில் திடீர் தீ விபத்து… ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்!

கோவை கோவை ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருடகள் எரிந்து சேதமடைந்தன.

சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம்!

மூன்றுநாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து ஊட்டி புறப்பட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி...
- Advertisment -
TopTamilNews