Home இந்தியா சுவாமி தத்வபோதானந்தா கொடூர கொலை: புதுச்சேரியில் பரபரப்பு!

சுவாமி தத்வபோதானந்தா கொடூர கொலை: புதுச்சேரியில் பரபரப்பு!

புதுச்சேரி அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்த, தத்வபோதானந்தா சுவாமி, மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி : புதுச்சேரி அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்த, சுவாமி தத்வபோதானந்தா மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

புதுவை பழைய சாரம் மொட்டைத்தோப்பு அண்ணாமலை நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்வர் தத்வபோதானந்தா சுவாமிகள். பொறியியல் பட்டதாரியான இவர் ஆன்மீகத்திலிருந்த நாட்டத்தால் துறவறம் பெற்றார்.  உபன்யாசம், இந்து முன்னணி கூட்டங்களில் சொற்பொழிவு,  ஜோதிடம், பரிகாரம் சொல்லி  வந்த இவருக்குச் சொந்தமாக சில சொத்துக்கள் உள்ளன. 

murder

இந்நிலையில் நேற்று காலையில் சுவாமி தத்வபோதானந்தாவின் வீட்டின் முன்பு கிடந்த பால் பாக்கெட் எடுக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து காவலாளியிடம் விசாரித்த போது, நேற்றிரவு மூன்று பேர் கொண்ட கும்பல் தன்னை அங்கிருந்து செல்லுமாறு கூறி மிரட்டியதாகவும், அதனால் அதிகாலை 5 மணிக்கு தான் பணிக்கு வந்தேன் என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி வாசிகள் தத்வபோதானந்தாவின் வீட்டின் கதவை உடைத்து பார்த்த பொது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து கோரிமேடு போலீஸ் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

crime

இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சுவாமி தத்வபோதானந்தாஅங்குள்ள 13 வீடுகளின் வரவு -செலவு கணக்குகளைக் கவனித்து வந்துள்ளார். அப்போது சிலர் அவரிடம் வாடகைக்கு வீட்டு கேட்டு தகராறு செய்ததாகவும்,அவர்களைச் சுவாமி தத்வபோதானந்தா கண்டித்ததாகவும் தெரிகிறது. இதனால் முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டாரா? அல்லது வேறேதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

“திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓராண்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள்” – ஆட்சியர் சிவன்அருள்

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் சிவன்அருள் தெரிவித்தார்.

தடுப்புச் சுவர் மீது கார் மோதி விபத்து : இளைஞர் பரிதாப பலி!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் வசித்து வரும் இப்ராஹீம் என்பவரின் மகன் ரகுமான்(36). இவர் நேற்று இரவு காரில் விருது நகரை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அருப்புக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை...

வைகை ஆற்றில் மிதந்த விஷ நுரை; பாலத்தை தாண்டி வெளியே வந்ததால் வாகன ஓட்டிகள் அவதி!

வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளநீருடன் வெண்மை நிறத்தில் விஷ நுரையும் கலந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கக்...

விஞ்ஞானியைக் கொன்ற தீவிரவாதிகள் – ஈரானில் நடந்த கொடூரம்

ஈரான் நாட்டைச் சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானி மெஹ்சென் ஃப்க்ஹிஸாத் (Mohsen Fakhrizadeh) மிகவும் புகழ்பெற்றவர். ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இமாம் ஹுசைன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுபவர். இவர் ஈரானிய...
Do NOT follow this link or you will be banned from the site!