சுர்ஜித்தின் குடும்பத்தினர் துடிப்பதைப் போல நாமும் துடிக்கிறோம் : முக ஸ்டாலின் ட்வீட்..!

மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டெடுக்கும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டெடுக்கும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று மாலை 5:30 மணிக்கு விழுந்த சிறுவனை, 17 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மீட்டெடுக்க முடியாமல் தமிழகத்தை சேர்ந்த மீட்புக் குழுவினர் திணறி வருகின்றனர். இந்நிலையில், சிறுவனை மீட்க 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு நவீன கருவிகளுடன் நடுகட்டுப்பட்டி வந்து, மீட்டெடுக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. 

Rescue team

இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம். அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி  வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார். 

 

Most Popular

ஆன்லைன் ரம்மிக்கு அடிமை… கடன் வாங்கி விளையாட்டு!- திருச்சி காவலர் எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான காவலர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் வாங்கி விளையாடியதால், கடன் கொடுத்தவர்கள் கேட்டதால் மனஉளைச்சலில் இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது. திருச்சி மாவட்டம், திருப்பாய்துறை,...

“அம்மா அந்த இடத்துல வலிக்குது” பக்கத்து வீட்டுக்காரரால் பலாத்காரம் செய்யப்பட்ட நாலு வயது சிறுமியின் அழுகையால் அலறிய அப்பார்ட்மெண்ட்

மும்பை நாக்பாடா பகுதியில் ஒரு நாலு வயது சிறுமியை ஒரு அம்மா வீட்டில் தனியே விட்டு விட்டு சென்ற வாரம் வேலைக்கு சென்றுள்ளார் ,அந்த சிறுமிக்கு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்துள்ளார் . அப்போது...

குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்மாவுக்கு நெகட்டிவ். தாய்ப்பால் கொடுக்கலாமா? – மருத்துவர் விளக்கம்

கொரோனா நோய்த் தொற்று பலவித சந்தேகங்களை மக்களிடம் நாள்தோறும் தோன்றச் செய்துகொண்டே இருக்கிறது. ஏனெனில், நோய்த் தொற்றால் புதிய நோயாளிகள் தினமும் அதிகரித்து வருகின்றனர். குணமடைபவர்களின்  சதவிகிதம் அதிகம். ஆனாலும் இறப்போர் எண்ணிக்கையும்...

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் 2ம் நாளாக போலீஸ் விசாரணை!

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் துளசி மணிகண்டன். இவரிடம் சென்னையை சேர்ந்த நீதிமணி, ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர் வட்டிக்கு பணம் பெற்று ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி...