Home சினிமா 'சுயமா சிந்திக்க தெரிஞ்சவன் தான் சூப்பர் ஹீரோ' : மிரட்டும் சிவகார்த்தியின் 'ஹீரோ' டிரைலர்!

‘சுயமா சிந்திக்க தெரிஞ்சவன் தான் சூப்பர் ஹீரோ’ : மிரட்டும் சிவகார்த்தியின் ‘ஹீரோ’ டிரைலர்!

மாணவர்களின் கனவுகள் மற்றும் சுயசிந்தனை  எப்படி ஒடுக்கப்படுகிறது என்பதை காட்டுகிறது இந்த ஹீரோ டிரைலர். 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள  புதிய படத்திற்கு, ‘ஹீரோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள  இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா ஆகியோர் நடித்துள்ளனர்.  யுவன் ஷங்கர்  ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ttn

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் லான்ச்  சத்யம் திரையரங்கில் இன்று காலை நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன்,  ரோபோ சங்கர், இயக்குநர் பி.எஸ். மித்ரன்,பா. விஜய் மற்றும் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இதை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு டிரைலரானது  இணையத்தில் வெளியானது. அதில், சிவகார்த்தி கல்யாணி பிரியதர்ஷினியுடன் காதல், போலி சான்றிதழ் அச்சடிக்கும் திருட்டு நபராக வருகிறார். பின்னர் அர்ஜுனின் ஆலோசனைப்படி  நல்லவராக மாறுவதும் போல காட்சியமைக்கப்பட்டுள்ளது. நான் படிப்பை வைத்து வியாபாரம் செய்பவன் அல்ல; படித்தவனை வைத்து வியாபாரம் செய்பவன், சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ என்றும் சிவகார்த்தி சொல்லும்  பஞ்ச் வசனங்கள் தெறிக்கவிடுகின்றன. கல்வி என்ற பெயரில் நாடாகும்  வியாபாரம், ஏழை மாணவர்களின் கனவுகள் மற்றும் சுயசிந்தனை  எப்படி ஒடுக்கப்படுகிறது என்பதை காட்டுகிறது இந்த ஹீரோ டிரைலர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

கும்பகோணம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு!

தஞ்சாவூர் கும்பகோணம் அரசு கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை இன்று தஞ்சை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை...

ஏன் இருக்கிறது என்று தெரியாத குடல்வால் ஏற்படுத்தும் பாதிப்பு… அறிகுறிகள் அறிவோம்!

மனித உடலில் எதற்காக இருக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் ஒரு உறுப்பு குடல்வால். அதனால் பயன் இருக்கிறதா என்று தெரியவில்லை. சிலருக்கு அது தொல்லையாக மாறுவது மட்டும் தொடர்கிறது. சிறுகுடல்...

தமிழக வாழ்வுரிமை கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த திமுக!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ளதால் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய காட்சிகளாக பார்க்கக்கூடிய அதிமுக - திமுக கட்சிகள் இந்த தேர்தலிலும் நேருக்கு...

வாக்கு சீட்டில் புகைப்படம் இருக்காது: தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. விருப்பமனு விநியோகம் நிறைந்து வேட்பாளர்களுக்கான...
TopTamilNews