Home தமிழகம் சுதந்திர தினவிழாவில் நடிகர் விவேக் செய்த காரியம் இதுதான் : குவியும் பாராட்டு!

சுதந்திர தினவிழாவில் நடிகர் விவேக் செய்த காரியம் இதுதான் : குவியும் பாராட்டு!

நாட்டின் 73 வது  சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் விவேக் அம்பத்தூர் பகுதியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டார். 

சென்னை:  நாட்டின் 73 வது  சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் விவேக் அம்பத்தூர் பகுதியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டார். 

vivek

நடிகர் விவேக் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாது அதன் வாயிலாகவே சமூகத்துக்குத் தேவையான பல நல்ல கருத்துக்களையும் கூறி வருகிறார். அதே போல் களப்பணியிலும்  ஈடுபட்டு வரும் விவேக், மாணவர்களையும் இதே போல் செயல்பட ஊக்குவித்து வருகிறார்.

vivek

இந்நிலையில் நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதைச் சிறப்பிக்கும் வகையில், அம்பத்தூரில்  அமைந்துள்ள பெரும் தலைவர் காமராஜ் பெண்கள் அரசு பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவேக், ஒரு லட்சம்  மரக்கன்றுகள் நடவு தொடக்கவிழாவில் கலந்து கொண்டு மரங்களை  நட்டு வைத்து மாணவிகள் மத்தியில் உற்சாகமாக உரையாடினார். 

 

அதோடு கிரீன் கலாம் மற்றும் அம்பத்தூர் நீர் நிலைப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்ட அவர்,  அம்பத்தூர், ஒரகடம், தாமரைக்குளத்தை ஜேசிபி  மூலம் தூர் வாரி ஆரம்பித்து வைத்து கரையில் மரங்களையும் நாட்டார். இந்த புகைப்படங்களை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விவேக்கின் இந்த டிவீட்-க்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

சம்மர் டூர் பிளான் செய்ய நல்ல வாய்ப்பு… குறைந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட விமான நிறுவனங்கள்!

வரும் கோடைக் காலத்தில் வெளியூர் செல்ல பிளான் போடுகின்றீர்களா... உங்களுக்காகவே மிகக் குறைந்த கட்டண டிக்கெட்டை போட்டிப் போட்டு அறிவித்துள்ளன இன்டிகோஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட். இன்டிகோ...

இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் மாஸ்டர் ! ரீமேக் உரிமையைக் கைப்பற்றியது யார் தெரியுமா?

தமிழில் வசூல் சாதனைப் படைத்த மாஸ்டர் இந்தியில் உருவாகுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்து ஜனவரி 13-ஆம் தேதி வெளியான மாஸ்டர்...

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாரு அருந்துவது நல்லதா… கெட்டதா?

காலையில் எழுந்ததும் காபி, டீ, எனர்ஜி டிரிங்க்ஸ் அருந்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். உடலை ஆரோக்கியமாக வைக்க நினைக்கும் பலர் தேன் கலந்த வெந்நீர், எலுமிச்சை நீர், இளநீர், நீராகாரம்,...

நாளை 166 இடங்களில் 19,073 சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் நாளை 166 இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும் 6 இடங்களில் கோவேக்சினும் வழங்கப்பட உள்ளன.
Do NOT follow this link or you will be banned from the site!