சுண்டைக்காயில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள்!

சுண்டைக்காய் என்கிற பெயரைக் கேட்டதுமே அது ஏதோ கெட்ட காய்கறி வகையைச் சேர்ந்தது என்றோ, மருந்துக்காக சாப்பிடும் உணவுப் பொருள் என்றோ பலரும் முகம் சுளித்து ஒதுக்கி விடுவார்கள். ஆனால், சுண்டைக்காய் உண்மையில் காய்கறிகளில் ராணியாகத் திகழ்கிற அளவிற்கு சத்துக்களை தன்னுள்ளே அடக்கியுள்ளது.

சுண்டைக்காய் என்கிற பெயரைக் கேட்டதுமே அது ஏதோ கெட்ட காய்கறி வகையைச் சேர்ந்தது என்றோ, மருந்துக்காக சாப்பிடும் உணவுப் பொருள் என்றோ பலரும் முகம் சுளித்து ஒதுக்கி விடுவார்கள். ஆனால், சுண்டைக்காய் உண்மையில் காய்கறிகளில் ராணியாகத் திகழ்கிற அளவிற்கு சத்துக்களை தன்னுள்ளே அடக்கியுள்ளது. நம்ம ஊர் தட்ப வெப்ப நிலைக்கு, இங்கே விளையும் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும் என்று நிறைய முறை படித்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம்.

sudakkai

ஆனால், அதையெல்லாம் படிப்பதோடு மறந்து விடுகிறோம். இன்னொரு முக்கியமான விஷயம், இதுவரையில் சுண்டைக்காயை எல்லாம் யாரும் ஹைபிரீட் செய்யவில்லை. இன்னமும் சுண்டைக்காய் நாட்டு ரகக் காயாகவே இருக்கிறது. கால்சியம் சத்துக்கள் குறைவாக இருக்கிறது என்று தினமும் டம்ளர் டம்ளராக பால் குடிக்கச் சொல்வார்கள். ஆனால், பாலில் சுத்தமான பால் எது என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. நாம் சுத்தம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஆவின் பாலில் கூட கலப்படங்கள் வரத் துவங்கிவிட்டது. சுண்டைக்காயில் சுண்ணாம்புச் சத்துகள் நிறைந்துள்ளது. 
இது தவிர சுண்டைக்காயில் இருக்கும் சத்துக்களைப் பட்டியலிட்டால், வாரத்தில் இரண்டு மூன்று தினங்களுக்காவது சுண்டைக்காயைச் சாப்பிட துவங்கி விடுவோம். தொண்டைச் சளியைக் குறைத்து, வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிறந்தது சுண்டைக்காய். குழந்தைகளுக்கு பசியை அதிகமாக்கும் செயலையும் செய்கிறது.   சுண்டைக்காய் கிடைக்கப் பெறாதவர்கள் சுண்டைக்காய் வற்றலைப் பயன்படுத்தலாம். 
தேவையான அளவு சுண்டைக்காயை, மோரில் நன்கு மூழ்கியிருக்குமாறு ஊற வைத்து, வெயிலில் காய வைத்து, வற்றலாகச் செய்துக் கொள்ள வேண்டும். இந்த சுண்டை வற்றலை தூள் செய்து கொண்டு, ¼ தேக்கரண்டி அளவில், தினமும், காலை, மாலை வேளைகளில், வெந்நீருடன் உட்கொள்ள வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். 
நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் இவற்றை சம எடையாக எடுத்து, நன்கு காயவைத்து, இளவறுப்பாய் வறுத்து, இடித்துத் தூள் செய்துக் கொள்ள வேண்டும். இதனை, 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட்டுவர வேண்டும். காலை, மாலை வேளைகளில், 2 நாட்களுக்கு இவ்வாறு செய்து வர பேதி கட்டுப்படும். சிலருக்கு சாப்பாடு சாப்பிட்ட ஐந்து நிமிடத்தில் வயிற்றை கலக்கும், உடனே மலம் கழிப்பார்கள்.  அவர்களுக்கான மருந்து இந்த சுண்டைவற்றல் சூரணம் தான்.  

sundakkai

சுண்டைக்காய் வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடிக்க அஜீரணம் குணமாகும்.
பச்சையான இளம் சுண்டைக்காய்களை குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம் கட்டுப்படும்.
சுண்டைக்காய் காரக்குழம்பு இன்றும் பிரபலமான ஒன்று. பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் உள்ள சளிக்கட்டு குறையும். இரத்தம் சுத்தமாகும்.
சுண்டைக்காய்க் குழம்பு எலும்புகள் உறுதியடையவும், நாக்கின் சுவை உணர்ச்சியை அறியும் திறனை அதிகமாக்கவும். மேலும், குரல்வளம் அதிகரிக்கவும் பயன்படும்.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...