சுஜித் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல நேரில் செல்கிறார் முதல்வர்..!

நாடு முழுவதும் ‘மீண்டு வா சுஜித்’ எனப் பல மக்கள் பிரார்த்தித்தும் அவர்களின் நம்பிக்கை பொய்யானது.

மணப்பாறை அருகே, நடுக்காட்டுபட்டியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று விளையாடிக் கொண்டிருந்த போது ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் தவறி விழுந்தான். 4 நாட்களாகச் சிறுவனை மீட்கப் போராடிய மீட்புக் குழு, இன்று காலை சுஜித்தின் உடலை அழுகிய நிலையில் மீட்டது. நாடு முழுவதும் ‘மீண்டு வா சுஜித்’ எனப் பல மக்கள் பிரார்த்தித்தும் அவர்களின் நம்பிக்கை பொய்யானது. இன்று காலை ‘சுஜித் இறந்து விட்டான்’ என்ற செய்தி அவனுக்காகப் பிரார்த்தித்த அனைத்து மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியது. 

Funeral

மீட்கப்பட்ட சுஜித்தின் உடல், இன்று காலை மணப்பாறையில் உள்ள மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல தலைவர்கள் சுஜித்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுஜித்தின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல இன்று பிற்பகல் 3:30 மணிக்கு நடுக்காட்டுபட்டிக்குச் செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. 

Most Popular

கொரோனா சிகிச்சை வார்டில் கணினி ஆசிரியர்கள் பணியாற்ற உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பரிசோதனைகளை அதிகரிப்பது, நடமாடும் மருத்துவமனை, கொரோனா மருந்துகள் என பல்வேறு...

ஒலிம்பிக் போட்டியின் இந்தியா டீம் ஸ்பான்ஸர் இந்த நிறுவனம்தான்!

உலகமே கொண்டாடும் விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக் போட்டிகள். வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருந்து எண்ணற்ற திறமையாளர்கள் மைதானத்தில் நிறைந்து வழியும் அற்புதம் நிகழ்வதும்கூட. சென்ற ஒலிம்பிக் 2016 ஆம் ஆண்டு...

“தூக்கு போடுறத பாக்கு போடுற மாதிரி பண்ணும் சிறுவர்கள்” -இந்த பையன் தற்கொலை பண்ணிக்கிட்ட அற்ப காரணத்தை பாருங்க .

ஒரு சிறுவன் தன்னுடைய தாயார் விளையாட பூனைக்குட்டி வாங்கி தராததால் தூக்கு போட்டுக்கொண்ட சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் தந்தை வெளிநாட்டிலிருப்பதால் ஒரு தாயும் 15 வயது சிறுவனும்...

‘பண்டிகை காலங்களைப் போன்று’.. டாஸ்மாக்குகளில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த மாதத்தை போலவே, இந்த மாதமும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்...
Do NOT follow this link or you will be banned from the site!