சுஜித் உயிரை பறித்த ஆழ்துளைக்  கிணறு மூடப்பட்டது!

கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில்  இன்று காலை 8.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது

குழந்தை சுஜித் விழுந்து உயிரிழந்த ஆழ்துளைக் கிணறு கான்கிரீட் கலவையால் மூடப்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள  நடுக்காட்டுப்பட்டியில்  சுஜித் என்ற 2 வயது குழந்தை தனது வீட்டின் தோட்டத்திலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த அந்த குழந்தையை மீட்க 80 மணிநேரத்தையும்  கடந்து மீட்பு படையினர் முயற்சி செய்தனர். தற்போது ஆழ்துளைக் கிணற்றின் அருகில் சுரங்கம்  போல குழி தோண்டப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. ரிக் இயந்திரம் பழுதானதால் தற்போது போர்வெல் மூலம் துளையிட்டு பின்பு மீண்டும் ரிக் இயந்திரம்  மூலம் பள்ளம் அகலப்படுத்தப்பட இருந்த நிலையில் பணிகள் துரிதமாக நடைபெற்றன. 

surjith

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக  சுஜித் உயிரிழந்ததாக  நேற்றிரவு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர்  சுஜித்தின் உடலை  மீட்டனர்.  பின்னர்  மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் உடல்  பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில்  இன்று காலை 8.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

sujith

இத்தனை துயரத்திற்கும் காரணமான 600 அடி  ஆழம் கொண்ட மூடப்படாத அந்த ஆழ்துளைக்  கிணறு 
சுஜித்தின் நல்லடக்கம் நடந்தபோது, கான்கிரீட் கலவையால் மூடப்பட்டது. இனி வரும் காலங்களிலாவது ஆழ்துளைக் கிணறுகளை மூட  அரசும், மக்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுஜித்தின்  இந்த மரண  போராட்டம் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. அதை இனியாவது கடைப்பிடிக்க  முயல்வோம்!

Most Popular

பொய்யின் குப்பைகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.. பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் குப்பைகள் இல்லாத இந்தியா என்னும் தூய்மை பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். சுதந்திர தினம் வரை ஒரு வாரத்துக்கு நாடு முழுவதும் நடைபெறும் குப்பை இல்லாத இந்தியா...

ராமர் கோயில் பூமி பூஜைக்கு குடியரசு தலைவரையும் மோடி அழைத்திருக்க வேண்டும்.. மாயாவதி திடீர் குற்றச்சாட்டு

அயோத்தியில் கடந்த 5ம் தேதியன்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அடிக்கல்லையும் நாட்டினார். இந்த விழாவுக்கு குடியரசு தலைவரையும் பிரதமர் மோடி அழைத்திருக்க வேண்டும்...

லாக்டவுனால் செருப்பு விற்பனை சுமாரு.. ரூ.101 கோடி நஷ்டத்தை சந்தித்த பாட்டா

பிரபல காலணிகள் தயாரிப்பு நிறுவனமான பாட்டா இந்தியா நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் பாட்டா இந்தியா நிறுவனத்துக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.100.88 கோடி...

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைன்னு சொன்னாங்க.. ஆனால் பதவிக்கு வந்ததும் மோடி மறந்து விட்டார்.. காங்கிரஸ்

நம் நாட்டின் பாரம்பரிய மிக்க அரசியல் கட்சியான காங்கிரசின் ஒரு பிரிவான இந்திய இளைஞர் காங்கிரசின் நிறுவிய தினம் நேற்று. தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் இந்திய இளைஞர் காங்கிரஸ் நிறுவன தினத்தில் இளைஞரணி...