Home அரசியல் சுங்கக் கட்டண உணர்வை ரத்து செய்ய வேண்டும்! - டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

சுங்கக் கட்டண உணர்வை ரத்து செய்ய வேண்டும்! – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

சுங்கச் சாவடிகளில் திடீரென்று கட்டணம் உயர்த்தப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், ஊரடங்கு முடியும் வரை சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சுங்கக் கட்டண உணர்வை ரத்து செய்ய வேண்டும்! - டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

சுங்கச் சாவடிகளில் திடீரென்று கட்டணம் உயர்த்தப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், ஊரடங்கு முடியும் வரை சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி உள்ளது.

toll-plaza-789

இந்த நிலையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ள மத்திய அரசு, கட்டண உயர்வையும் கண்டுகொள்ளாமல் உள்ளது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று (ஏப்ரல் 20) வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ஊரடங்கு நேரத்தில்  பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி சுங்கச்சாவடிகளை மீண்டும் திறந்ததோடு, சுங்கக்கட்டணங்களையும் அதிகரித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

toll-plaza-78

முன் எப்போதும் இல்லாத நெருக்கடியான நேரத்தில் 5 % முதல் 12% வரை சுங்கக்கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது ஏற்புடையதல்ல. இந்தச்செயல்  அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்தை மேற்கொண்டிருப்பவர்களுக்குப் பொருளாதார சுமையை ஏற்படுத்துவதுடன், அப்பொருட்களின் விலை உயரவும் வழிவகுக்கும்.
எனவே, சுங்கக்கட்டண உயர்வை ரத்து செய்வதுடன், ஊரடங்கு நீடிக்கும் வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

சுங்கக் கட்டண உணர்வை ரத்து செய்ய வேண்டும்! - டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

போலீசாரிடம் மீண்டும் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் மீண்டும் போலீசாரிடம் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை...

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் வங்கி தொடர்பான...

சமோசா திடீர் விலை உயர்வால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

திடீரென சமோசா விலை உயர்ந்ததால் அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம்...

நடிகர் ஆர்யா மீது புகார்- சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் மீதான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Advertisment -
TopTamilNews