Home உலகம் சீமான் உன் தலைவனா என்று கேட்டு அடி... இலங்கையில் சினிமா இயக்குநருக்கு நேர்ந்த கொடூரம்!

சீமான் உன் தலைவனா என்று கேட்டு அடி… இலங்கையில் சினிமா இயக்குநருக்கு நேர்ந்த கொடூரம்!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ் திரைப்பட இயக்குநர் களஞ்சியத்தை இலங்கை ராணுவத்தினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து களஞ்சியம் கூறுகையில், “அரசியல் தலைவர்கள் எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்கள் தினத்தன்று ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். நான் ஒரு மாற்றத்துக்காக இலங்கை செல்ல திட்டமிட்டு சென்றேன். யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு என்னுடைய அறைக்கு திரும்பியபோது, ராணுவ வீரர்கள் வந்து மிரட்டினார்கள். 

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ் திரைப்பட இயக்குநர் களஞ்சியத்தை இலங்கை ராணுவத்தினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து களஞ்சியம் கூறுகையில், “அரசியல் தலைவர்கள் எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்கள் தினத்தன்று ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். நான் ஒரு மாற்றத்துக்காக இலங்கை செல்ல திட்டமிட்டு சென்றேன். யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு என்னுடைய அறைக்கு திரும்பியபோது, ராணுவ வீரர்கள் வந்து மிரட்டினார்கள். 

kalanjiyam

வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் கூட இங்கு இருப்பது நல்லதல்ல, இந்தியா புறப்படுங்கள் என்றார். நானும் அதை ஏற்று இந்தியா செல்வதற்காக பலாலி விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு செல்ல தயாரானேன்.
திரிகோணமலை விமானநிலையத்தில் என்னை மட்டும் தனியாக இறக்கி விசாரணை நடத்தினர். என்னை ஒரு சிறைக் கைதியை விட மோசமாக நடத்தினார்கள். அப்போது, ராணுவ வீரர்கள் சுற்றிலும் நின்று என்னிடம் கேள்விகளால் துளைத்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வேல்முருகன், சீமானுடன் இருந்த படத்தைக் காட்டி நீ என்ன விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர்கொடுக்க வந்தாயா, நீ என்ன சீமானின் கட்சியா? யார் உன்னுடைய தலைவன்? சீமான்தான் உன் தலைவனா… என்று கேட்டார். அதற்கு நான் எனக்கு தலைவன் என்று யாரும் இல்லை என்று கூறினேன்

kalanjiyam

. அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் இருந்து ஒருவர் துப்பாக்கியால் என்னைத் தாக்கினார். இதில் என் எழுத்து எலும்பு, பல் உடைந்தது. ஐந்து மணி நேரம் விடாமல் அடித்தார்கள்.
பின்னர் சிறு விமானத்தில் ஏற்றி எங்கோ கொண்டு சென்றார்கள். செல்லும் வழியில் கொன்றுவிடுவார்களோ என்று அச்சம் ஏற்பட்டது. ஆனால், என்னைக் கொழும்பு கொண்டு சென்று விமானத்தில் ஏற்றினார்கள். அவ்வளவுதான் தெரியும்… இங்கே எப்படி வந்து சேர்ந்தேன், மருத்துவமனையில் எப்படி அனுமதிக்கப்பட்டேன் என்ற நினைவே இல்லை.

kalanjiyam

இலங்கையில் சுற்றுலா சென்ற இந்திய பிரஜை தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்தியத் தூதரகத்தில் புகார் அளித்து பிரச்னையை பெரிதாக்க முடியும், ஆனால் அப்படி செய்தால், இலங்கையில் என்னை நிகழ்ச்சிக்கு அழைத்த பலரும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் புகார் அளிக்கவில்லை” என்றார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘மோடி அரசை துரத்துவது ரொம்ப ஈஸி’ – ராகுல் காந்தி அதிரடி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி 3 ஆவது கட்ட பரப்புரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியிருக்கிறார். நேற்று காலை தனி விமானத்தில் தூத்துக்குடிக்கு வந்த அவர், தூத்துக்குடி வ.உ.சி....

“ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுங்க ,இன்பமா இருங்க..” -விலைப்பட்டியலோடு விலைபேசப்பட்ட பெண்

16 வயதான பெண்ணின் போட்டோவை, ஊடகத்தில் விபச்சாரியாக சித்தரித்து வெளியிட்ட இன்னோரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு : மத்திய அரசு பகீர் தகவல்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்கியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இன்று புதிதாக 16,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும் 113 பேர் கொரோனாவுக்கு...

மீண்டும் இந்தியில் கடிதம்… எழுதிய அமைச்சருக்கே திருப்பி அனுப்பி சு. வெங்கடேசன் எம்பி சம்பவம்!

மத்திய கலாச்சார அமைச்சகம் சு. வெங்கடேசன் எம்.பிக்கு இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட மீறல்களைச் செய்தால் களைத்துப் போய் எதிர்ப்பைக் கைவிட்டு விடுவோமென்று நினைக்காதீர்கள்...
TopTamilNews