Home இந்தியா சீனா, பாகிஸ்தான் அனுப்பிய விஷ வாயுவே டெல்லி காற்று மாசுவுக்கு காரணம் - பாஜக தலைவர்!

சீனா, பாகிஸ்தான் அனுப்பிய விஷ வாயுவே டெல்லி காற்று மாசுவுக்கு காரணம் – பாஜக தலைவர்!

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுவுக்கு பாகிஸ்தான் மற்றும் சீனா அனுப்பிய விஷ வாயுவே காரணம் என உத்திரப் பிரதேச பாஜக தலைவர் வினீத் அகர்வால் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுவுக்கு பாகிஸ்தான் மற்றும் சீனா அனுப்பிய விஷ வாயுவே காரணம் என உத்திரப் பிரதேச பாஜக தலைவர் வினீத் அகர்வால் தெரிவித்துள்ளார். 

தீபாவளி முடிந்த பின்னர் டெல்லியில் கடும் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது.  ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடை செய்த பின்னர் விவசாய கழிவுகளை எரிப்பதும் காற்று மாசுவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. டெல்லி முழுவதும் காற்று மாசுபட்டால் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. காற்று மாசை கட்டுப்படுத்த வாகனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் டெல்லி அரசு கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. 

UP Bjp leader

இந்நிலையில் மீரட்டில் செய்தியாளர்களை சந்தித்த உத்திர பிரதேச மாநில பாஜக தலைவர் வினீத் அகர்வால், “ இந்தியாவில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற அண்டை நாடுகள் விஷ வாயுவை காற்றில் அனுப்பியிருக்கலாம். பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானதாலும், ஜம்முவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததாலும் பாகிஸ்தான் அதிருப்தியில் உள்ளது. இதனால் பாகிஸ்தானில் இருந்து விஷ வாயு வருகிறதா என்பதை நாம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். எந்த ஒரு போரிலும் இந்தியாவை வெல்ல முடியாத பாகிஸ்தான் இதுபோன்ற தந்திரங்களில் ஈடுபடக்கூடும்” என்று தெரிவித்துள்ளார். 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews