Home உலகம் சீனா, இத்தாலிக்கு அடுத்து கொரோனா வைரஸால் அவதியுறும் ஈரான் - பலியானோர் எண்ணிக்கை 988-ஆக உயர்வு

சீனா, இத்தாலிக்கு அடுத்து கொரோனா வைரஸால் அவதியுறும் ஈரான் – பலியானோர் எண்ணிக்கை 988-ஆக உயர்வு

கொரோனா வைரஸ் காய்ச்சலால் ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 988-ஆக உயர்ந்துள்ளது.

டெஹ்ரான்: கொரோனா வைரஸ் காய்ச்சலால் ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 988-ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ttn

ஈரானில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 988-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் கொரோனா வைரஸால் புதிதாக 135 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் ஈரானில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனா, இத்தாலிக்கு அடுத்து ஈரானில்தான் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அந்த நாட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

Most Popular

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து paytm செயலி நீக்கம்.. என்ன காரணம்?!

சூதாட்ட கொள்கையை மீறியதால் paytm செயலி ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நவீன காலத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருப்பதால், மக்களின் செல்போன்களிலேயே எல்லா தேவைகளையும்...

எல்லா மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு 10%க்கு கீழ் குறைந்துள்ளது: அமைச்சர் தகவல்!

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்திருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும்...

‘பல்லாவரம் மேம்பாலம் சரியில்லை’ புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலம் பற்றி வாகன ஓட்டிகள் புகார்!

நேற்று முதல்வர் திறந்து வைத்த பல்லாவரம் மேம்பாலம் சரியில்லை என வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை பல்லாவரத்தில் சுமார் 82 கோடி செலவில் கட்டப்பட்ட...

மதிமுக பிரமுகர் வெட்டி கொலை! விருதுநகரில் பதற்றம்!

மதிமுகவின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தில் வசித்து வந்தவர் சிவா...
Do NOT follow this link or you will be banned from the site!