Home உலகம் சீனாவில் 1700-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு

சீனாவில் 1700-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு

சீனாவில் 1700-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் 1700-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவில் 1700-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ttn

இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கும் மருத்துவர்களுக்கும், நர்ஸ்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதால் பெரும் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.  இந்த நிலையில், சீனாவில் 1700-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இதுவரை 6 சுகாதார பணியாளர்கள் இறந்துவிட்டதாக தேசிய சுகாதார ஆணையத்தின் துணை இயக்குநர் ஜெங் யிக்சின் தெரிவித்துள்ளார். சீனாவில் சுகாதார ஆணையம் மிகவும் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. மருத்துவ நிறுவனங்கள் உதவியுடன் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சீனாவில் 1700-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“அதிமுக ஆட்சியில் கோவில் சிலை திருட்டுகள் மறைப்பு” – வெளியான பகீர் தகவல்!

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்துக்கள், நகைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடு காணாமல் போயுள்ளதாகவும், கோவில் சிலைகள், நகைகள் காணாமல் போயுள்ளதாகவும் கூறி...

’’அடிபணிந்துவிட்டார்; ஆட்சிக்கான முடிவுரையை அவரே எழுதிக் கொண்டுவிட்டார்’’

நடந்து முடிந்த தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் -பாஜகவும் கூட்டணி வெற்றி பெற்றது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி கொரோனாவினால் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் கொல்லைப்புறமாக வந்து பாஜக ஆட்சி அமைக்க...

அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மிக கனமழை கொட்டும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை...

“ஒரே மதம்னு சொல்லி மத யானை மாதிரி என்னை வேட்டையாடிட்டான் ” – காதலன் மீது புகாரளித்த காதலி .

காதலியை மதம் மாற சொல்லி ,பலாத்காரம் செய்த ஒரு காதலனை போலீசார் கைது செய்தனர்.
- Advertisment -
TopTamilNews