சீனாவிலிருந்து புதுக்கோட்டை வந்த நபர் திடீர் மரணம்…மக்கள் அச்சம்!

அவர் இறப்பிற்கு  நுரையீரல் பாதிப்பு  மற்றும் மஞ்சள் காமாலை தான் காரணம்  என்று சொல்லப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் சக்திகுமார். இவர் கடந்த 4 ஆம் தேதி சீனாவிலிருந்து சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். இதையடுத்து அவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. இதனால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 14 ஆம் தேதி உயிரிழந்தார். அவர் இறப்பிற்கு  நுரையீரல் பாதிப்பு  மற்றும் மஞ்சள் காமாலை தான் காரணம்  என்று சொல்லப்பட்டது. 

ttn

இருப்பினும் சக்திகுமார் சீனாவிலிருந்து திரும்பியவர் என்பதே சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அவர் இறப்பிற்கு பிறகு தான் தெரியவந்துள்ளது.  சீனாவிலிருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் பட்டியலில் சக்திகுமார் பெயர் இடம்பெறவில்லை. 

ttn

பொதுவாக சீனாவிலிருந்து இந்தியா திரும்பும் நபர்கள் 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்ட பிறகு தான் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அப்படி இருக்கையில் சக்திகுமார் குறித்த தகவல் அறியாத அதிகாரிகள், அவரின் திடீர் மரணம் அப்பகுதிவாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Most Popular

ஸ்விக்கி ஃபுட் டெலிவரி செய்வதுபோல கஞ்சா விற்பனை! போலீஸ் ரெய்டில் சிக்கிய பெண்

ஸ்விக்கி ஃபுட் டெலிவரி செய்வதுபோல கஞ்சா விற்பனை செய்து வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வனிதா (32). இவர் கார் டிரைவராகவும் ஸ்விகி ஃபுட் டெலிவரி செய்யும் வேலையும்...

திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவிற்கு வர அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு!

பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் அதிருப்தியில் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுக பொருளாளரான துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவி கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் அதனால் திமுகவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக பிரபல...

சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுங்கள் : முக ஸ்டாலினுக்கு கு.க செல்வம் கடிதம்

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம். திமுக தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வரும் இவர் திமுக தலைமையிடத்துக்கு நெருக்கமானவர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், மேற்கு...

கொரோனா சிகிச்சைக்கு ரூ. 7 லட்சம் கட்டணம் : தனியார் மருத்துவமனைக்கு அரசு அனுமதி தற்காலிக ரத்து!

தமிழகத்தில் முதற்கட்டமாக கொரோனா சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வந்தது. ஆனால் நாளாக நாளாக தீவிரம் அதிகரித்து வந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை க்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் 112 தனியார்...