Home தமிழகம் சி.ஏ படிப்புக்கு இலவச கோச்சிங் : அமைச்சர் செங்கோட்டையன்

சி.ஏ படிப்புக்கு இலவச கோச்சிங் : அமைச்சர் செங்கோட்டையன்

சேலம் மாவட்டம் கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் பட்டயக் கணக்காளர் (சி.ஏ) படிப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் மாவட்டம் கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் பட்டயக் கணக்காளர் (சி.ஏ) படிப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில், அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 

minister

அந்த நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “இந்தியாவிலேயே முதன் முறையாகப்  பட்டயக் கணக்காளர் (சி.ஏ) படிப்புக்கான இலவச பயிற்சி தமிழகத்தில் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களில் சுமார் 21 ஆயிரம் மாணவர்களுக்கு அரசு சார்பில் கோச்சிங் வழங்கப்படவுள்ளது. அதன் படி, ஒரு ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் பட்டயக் கணக்காளர்களை உருவாக்க முடியும். இந்தியாவில் மொத்தம் 21 ஆயிரம் பட்டயக் கணக்காளர்கள் தேவை. ஆனால், 2 லட்சத்து 85 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர் ” என்று தெரிவித்துள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

பா.ம.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பா.ம.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. பூதப்பேடு பகுதியில்...

சமூக வலைதளங்களில் திருமாவளவன் மீது அவதூறு பரப்பிய பாமக பிரமுகர் கைது!

சமூக வலைதளத்தில் திருமாவளவன் மீது அவதூறு பரப்பியதாக பாமக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்கக்கோரி பாமகவினர் சூளகிரி காவல் நிலையம் முன்பு தீ குளிக்க முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இரட்டைக்கொலை – பிரபல ரவுடியின் சகோதரர் உட்பட 2 பேர் கைது

மதுரையில் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தின் தம்பி செந்தில் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

இந்த சலூன்கடைக்காரரால் இந்தியாவுக்கு பெருமை – பிரதமர் மோடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சலூன் கடை நடத்தி வரும் பொன்மாரியப்பன் தனது கடையின் ஒரு பகுதியில் நூலகம் ஒன்றை அமைத்திருக்கிறார். அவருடைய சலூன் கடைக்கு வருபவர்கள் முடித்திருத்தம் செய்துகொள்வதுடன் நூல்களையும் படித்து...
Do NOT follow this link or you will be banned from the site!