சி.ஏ.ஏ-வில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வரி இருந்தால்… ஸ்டாலினிடம் சாவல் விட்ட பா.ஜ.க முரளிதரராவ்!

தமிழகத்தில் பொய் கூறி இனி ஸ்டாலினால் எதுவும் செய்ய இயலாது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இந்திய நாட்டிலோ, தமிழகத்திலோ வாழக்கூடிய முஸ்லிம்களுக்கு எதிராக ஏதேனும் ஒரு வரி இருப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகி வனவாசம் போகத் தயார்.

கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க-வில் இணையும் விழா இன்று நடந்தது. இதில் வீரப்பன் மகள் வித்யா ராணி உள்ளிட்டோர் பா.ஜ.க-வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். 
விழாவின்போது முரளிதரராவ் பேசியதாவது, 
“தமிழகத்தில் பொய் கூறி இனி ஸ்டாலினால் எதுவும் செய்ய இயலாது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இந்திய நாட்டிலோ, தமிழகத்திலோ வாழக்கூடிய முஸ்லிம்களுக்கு எதிராக ஏதேனும் ஒரு வரி இருப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகி வனவாசம் போகத் தயார்.

mkstalin

1947ம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் அப்போது இருந்த முஸ்லிம்கள் மற்றும் மசூதிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதா அல்லது அதிகரித்து உள்ளதா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால், பாகிஸ்தானில் சுதந்திரத்திற்குப் பிறகு 24 சதவீதமாக இருந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அந்நாட்டு சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை 2 சதவீதமாகக் குறைந்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் ஆபத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமானால் அங்குள்ள இந்துக்கள் இந்தியா வந்தால் பாதுகாப்பு அளிக்கப்படும் என மகாத்மா காந்தி தெரிவித்துள்ளார். அந்த வழியில்தான் தற்போது பிரதமர் மோடியும் அங்கு சிறுபான்மையாக இருக்கக்கூடிய மக்கள் இந்தியா வந்தால் குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கிறார்.இதனால் ஸ்டாலினுக்கு தலைவலியும் வயிற்றுவலியும் ஏன் வருகிறது? 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மோடியின் கைப்பாவை என ஸ்டாலின் விமர்சிக்கிறார். தமிழக முதல்வர் பாரதப் பிரதமரை தன் கையில் வைத்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லையே? ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் பாகிஸ்தானில் இருக்கும் இம்ரான்கானுக்கு கைப்பாவையாக இருக்கிறார். அவ்வாறு செயல்படும் ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்றார்.

Most Popular

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....

அடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை- ஐசிசி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக், விம்பிள்டன் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கும் வரும் என தெரியாததால் எதிர்வரும்...