சிவனும் முருகனும் அப்பா மகன் இல்லை! – அடித்துச் சொல்லும் சீமான்

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் முப்பாட்டன் முருகன் என்று பேசி வருவதை இந்து அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு சுகி சிவம் முருகனும் சுப்ரமணியனும் வேறு வேறு என்று கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விஷயத்தை மீண்டும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் கையில் எடுத்துள்ளார்.

சிவனும் மகனும் அப்பா மகன் இல்லை… இருவரும் வெவ்வேறு காலக்கட்டத்தைச் சார்ந்தவர்கள் என்று நாம் தமிழர் சீமான் பேசியிருப்பது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் முப்பாட்டன் முருகன் என்று பேசி வருவதை இந்து அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு சுகி சிவம் முருகனும் சுப்ரமணியனும் வேறு வேறு என்று கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விஷயத்தை மீண்டும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் கையில் எடுத்துள்ளார். இது என்ன மாதிரியான பிரச்னையை கிளப்பப் போகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

seeman-ntk

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் இணையதள பாசறைக் கூட்டம் நடந்தது. இதில், சீமான் பங்கேற்று பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். அப்போது அவர், “மராட்டிய சரபோஜி மன்னர்கள் படையெடுத்து வந்து தமிழர்களை வென்றது போல, மராட்டியரான ரஜினி படம் எடுத்து வந்து ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார். 
தமிழர்களின் தெய்வமாக பார்க்கப்பட்ட கொற்றவை தான் பார்வதி என்று மாற்றப்பட்டார். சிவனுடைய மகன் முருகன் என்று திரைக்கதை எழுதி தமிழர்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். சிவன் காலம் வேறு, முருகன் காலம் வேறு. கண்ணன் கருமை நிறமா, நீல நிறமா என்பதில் கவிஞர் கண்ணதாசனுக்கே குழப்பம் இருந்துள்ளது. நீல நிறம் என்பது வடக்கிலிருந்து திணிக்கப்பட்டது.
தலைவர் பிரபாகரன் ராஜபக்சேவைக் கூட மஹிந்த இருக்கானே என்று சொல்லியது இல்லை. மஹிந்த அவர்கள் என்று தான் சொல்வார். அவர் என்னிடம் சொன்னார், படிக்கும் காலத்தில் நண்பர்களை விளையாட்டுக்கு கூட பிடித்துத் தள்ளியது இல்லை என்றார். யாரையும் போடா வாடா என்று பேசியது இல்லை என்றார். வயதில் பெரியர், சிறியவர் என யாரையும் வாடா போடா என்று பேசியதே இல்லை” என்றார். சீமானின் இந்த பேச்சு இந்து அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

இன்றைய ராசிபலன்கள் 12-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...

கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில்...

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியல்...

பா.ஜ.க. அரசின் மோசடிகள் ஹரியானாவை திவால் நிலைக்கு தள்ளுகின்றன… காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஹரியானாவின் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ஊழல்கள் மாநிலத்தை திவால் நிலைக்கு தள்ளுவதாக குற்றம் சாட்டினார்....
Do NOT follow this link or you will be banned from the site!