Home சினிமா சிவகார்த்திகேயன்,பாண்டிராஜ் படத்தை விட்டு வெளியேறினாரா ஐஸ்வர்யா ராஜேஷ்?

சிவகார்த்திகேயன்,பாண்டிராஜ் படத்தை விட்டு வெளியேறினாரா ஐஸ்வர்யா ராஜேஷ்?

பாண்டியராஜன் சன்பிக்சர்ஸுக்கு இயக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் அவருக்குத் தங்கையாக நடிப்பது குறித்து கிண்டலாக வெளியான செய்திகளுக்கு மிகவும் காட்டமாக பதில் அளித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

பாண்டியராஜன் சன் பிக்சர்ஸுக்கு இயக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் அவருக்குத் தங்கையாக நடிப்பது குறித்து கிண்டலாக வெளியான செய்திகளுக்கு மிகவும் காட்டமாக பதில் அளித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழில் ஐஸ்வர்யா நடிப்பில் நல்ல ஹிட்டடித்த ‘கனா’ படம் இவரது நடிப்பிலேயே தெலுங்கில் ’கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது. அதன் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியான நிலையில் ஹைதராபாத்தில் நிருபர்கள் மத்தியியில் பேசிய ஐஸ்வர்யா,”தமிழில் அதிக கமர்ஷியல் படங்களில் வாய்ப்பு கிடைக்காதது பற்றி எப்போதுமே எனக்குப் பெரிய வருத்தமில்லை. கமர்ஷியல் டைரக்டர்களின் கதாநாயகிகள் பட்டியலில் நான் மூன்றாவது நான்காவது இடத்தில்தான் இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். இரண்டு பாடல்கள், நான்கு காதல் காட்சிகள் மட்டும் இருக்கும் படங்களில் நடிக்க எனக்கு விருப்பமும் இல்லை.

கம்ர்ஷியல் படங்களில் நடிக்கும் நடிகைகளின் மார்க்கெட் நீண்டகாலம் நீடிப்பதில்லை. ‘காக்கா முட்டை’ ,’கனா’ போன்ற படங்கள்தான் எப்போதும் என் சாய்ஸ். போக எனக்கு கிளாமரான உடலமைப்பும் இல்லை என்பது எனக்குத் தெரியும்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் படத்தில் தங்கை கேரக்டரில் நடிப்பதை பலர் கவுரவக்குறைவாகவும் எனக்கு மார்க்கெட் இறங்கிவிட்டதாகவும்மிகத் தீவிரமாக செய்தி பரப்பி வருகிறார்கள். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிப்பதால் படத்தின் ஹீரோயின் அவர்தான் என்பதால் எனக்கு கதையில் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமா? உண்மையில் அப்படத்தின் நாயகி வேடமென்பது கதாநாயகனின் தங்கை வேடம் தான். நான் ஹீரோயினாக நடித்த மற்ற எல்லாப் படங்களையும் விட இதில் அதிக முக்கியத்துவம் இருக்கும்.

நிலைமை இப்படி இருக்க முதலில் கதாநாயகி வேடம் என்று சொல்லி என்னை ஏமாற்றிவிட்டு பின்னர் தங்கை வேடம் தந்து இயக்குநர் என்னை ஏமாற்றிவிட்டதாகவும் அதனால் நான் படத்தை விட்டே வெளியேறத் துடித்ததாகவும் கூட எழுதுகிறார்கள். அவர்களை என்ன செய்யலாம் என்பது கூட புரியவில்லை’என்று பொங்கித் தீர்க்கிறார் ஐஸ்வர்யா.

மாவட்ட செய்திகள்

Most Popular

சசிகலாவுக்கு இயல்பிலிருந்து ஆக்ஸிஜன் அளவு எவ்வளவு குறைந்தது?

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட 4 பேர்...

சர்ச்சை ட்வீட்… மனிதநேயமற்ற செயல்… சீன தூதரகத்தின் கணக்கை லாக் செய்த ட்விட்டர்!

உய்குர் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அமெரிக்காவிலுள்ள சீன தூதரகம் வெளியிட்ட ட்வீட் தங்களது கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி, தூதரக கணக்கை ட்விட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.

“உன் எச்சில் பட்ட இடத்திலெல்லாம் ஆசிட் பட்டுடுச்சே” -ஒரு பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த நிலை.

கிராமத்திற்கு குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது ஆசிட் வீசிய கணவரை போலீசார் கைது செய்தார்கள் . கிழக்கு...

பிளக்ஸ் போர்டு நிறுவன உரிமையாளர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை

கோயமுத்தூர் கோவை அருகே பிளக்ஸ் போர்டு நிறுவன உரிமையாளரின் வீட்டு பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!