Home தமிழகம் சிலை கடத்தல் ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் : பொன். மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் : பொன். மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் தான் என்னைச் சிறப்புச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமித்ததால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காமல் ஆவணங்களைத் தர முடியாது என்று தெரிவித்தார். 

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் கடந்த நவம்பர் 30 ஆம் தேதியோடு முடிந்தது. அதனால், சிலை கடத்தல் தொடர்பாக அவரிடம் இருக்கும் அனைத்து கோப்புகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங்கிடம்  ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் தான் என்னைச் சிறப்புச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமித்ததால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காமல் ஆவணங்களைத் தர முடியாது என்று தெரிவித்தார். 

ttn

அதன் பின், ஆவணங்களை ஒப்படைக்கும் படி கடந்த 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து, பொன்.மாணிக்கவேல் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பணிகள் நிறைவடைந்ததும் சிடி வடிவில் சமர்ப்பிக்கிறேன் என்றும் நீதிமன்றத்தின் உத்தரவின் படி ஆவணங்களை ஒப்படைப்பேன் என்றும் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவின் படி அவர் ஆவணங்களை ஒப்படைக்காததால் அவர் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. 

ttn

தமிழக அரசு தொடர்ந்த அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், ஒரு வாரத்திற்குள் சிலை கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது. மேலும், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

கழிவு மண் விளக்குகளை சுத்தம் செய்து வர்ணம் பூசி மறுவிற்பனை.. குழந்தைகளின் கல்விக்கு நிதி திரட்டும் குழு

சண்டீகரை சேர்ந்த ஒரு குழு, வேண்டாம் ஒதுக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட மண் விளக்குகளை சுத்தம் மற்றும் வர்ணம் பூசி அவற்றை மறுவிற்பனை செய்கிறது. அதில் கிடைக்கும் வருவாயை ஏழை குழந்தைகளின் கல்விக்காக...

தங்கம், வெள்ளி வேஸ்ட்… வெங்காயம்தான் பெஸ்ட்… 58 மூடை வெங்காய மூட்டைகளை லபக்கிய புனே திருடர்கள்..

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ரூ.2.35 லட்சம் மதிப்பிலான 58 வெங்காய மூடைகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டின் சில பகுதிகளில் பெய்த...

ஊழல் அரசியல் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகி விட்டது..ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு நாளில் முடிந்து விடாது.. மோடி

பல மாநிலங்களில் ஊழல் அரசியல் பராம்பரியத்தின் ஒரு பகுதியாகி விட்டது. ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு நாளில் முடிந்து விடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
Do NOT follow this link or you will be banned from the site!