Home அரசியல் சிலிண்டருக்கு "பாடை கட்டி" காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.. சிலிண்டர் விலை உயர்வின் எதிரொலி!

சிலிண்டருக்கு “பாடை கட்டி” காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.. சிலிண்டர் விலை உயர்வின் எதிரொலி!

இந்தியன் ஆயில் நிறுவனம் இந்தியா முழுவதும் தினமும் 30 லட்சம் இண்டேன் (Indane)  சிலிண்டர்களை விற்பனை செய்து வருகின்றன.

இந்தியன் ஆயில் நிறுவனம் இந்தியா முழுவதும் தினமும் 30 லட்சம் இண்டேன் (Indane)  சிலிண்டர்களை விற்பனை செய்து வருகின்றன. சிலிண்டரின் விலை சர்வதேசச் சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டு வருகின்றன. அதே போலக் கடந்த 12 ஆம் தேதி மானியமில்லாத சிலிண்டர்களுக்கான விலை ரூ.147 உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 6 ஆவது முறையாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ரூ.287 உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

சிலிண்டர் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் , கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதில், சிலிண்டருக்கு பாடை கட்டி மாலை அணிவித்து சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

லாட்டரில சீட்டு விழுவதுபோல எனக்கு அமைச்சர் பதவி கிடைச்சது- அமைச்சர் பாஸ்கரன்

தமிழக கதர் துறை அமைச்சர் பாஸ்கரன் சமீபத்தில் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து பிரபலம் ஆக முயற்சித்து வருகிறார். அந்த வகையில் முன்னதாக மற்ற அமைச்சர்களைப் போல நான் பந்தா இல்லை,...

மாநகர பகுதிகளில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை – மக்கள் அவதி

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடுமாநகரில் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக அவற்றுக்கு, மாநகராட்சி சார்பில் கருத்தடை...

சட்டவிரோதமாக மது விற்ற 123 பேர் கைது; 1,882 மதுபாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 123 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆயிரத்து 882 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தேவர் குருபூஜை விழாவையொட்டி,...

நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டடம் இடிந்து விழவில்லை; அதிகாரிகளே இடித்தனர்- அமைச்சர் தங்கமணி

நாமக்கல்லில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள 25 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ. 336 கோடி மதிப்பீட்டில் இந்த அரசு மருத்துவக்கல்லூரி...
Do NOT follow this link or you will be banned from the site!