Home தமிழகம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சர் முதல்வருடன் அவசர ஆலோசனை

சிறை தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சர் முதல்வருடன் அவசர ஆலோசனை

3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, முதல்வர் பழனிசாமியை அவரது சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை: 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, முதல்வர் பழனிசாமியை அவரது சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கடந்த 1998-ம் ஆண்டு கள்ளச்சாரயம் வியாபாரத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக, தற்போதைய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி  உள்ளிட்ட 108 பேர் அரசு வழக்கு தொடரப்பட்டது.

ஒசூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. 

இந்த நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ரூ 10,500 அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.

அதனையடுத்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ள அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
 

மாவட்ட செய்திகள்

Most Popular

கட்டும்போதே சரிந்துவிழுந்த கல்லூரி! அவசரக் கோலமே அலங்கோலத்திற்கு காரணம்: கமல்ஹாசன்

நாமக்கல்லில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள 25 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ. 336 கோடி மதிப்பீட்டில் இந்த அரசு மருத்துவக்கல்லூரி...

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 40% போனஸ் வழங்க ஐ.என்.டி.யூ.சி தீர்மானம்

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 40 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டுமென ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசு போக்குவரத்து கழக, ஈரோடு மண்டல ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கத்தின்...

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – ஒருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் கூட்டுரோடு பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிகொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். rep image

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையால் ஆளுநர் ஒப்புதல் கிடைத்ததா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதலமைச்சருடன் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர்...
Do NOT follow this link or you will be banned from the site!