‘சிரஞ்சீவி கேட்கவில்லை, நான் சொல்வதை நீங்களாவது கேளுங்கள் ரஜினி’ : அமிதாப் பச்சன் அட்வைஸ்!

ரஜினியின் மக்கள் மன்றத்தினர்   கட்சி தொடங்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு அரசியல்  வருகையை உறுதி செய்த ரஜினிகாந்த் அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவ்வப்போது சில விவகாரங்கள் குறித்துப் பேட்டியளித்த வரும் அவர், படங்களில் நடிப்பதில் அக்கறை காட்டி வருகிறார்.

rajini

இருப்பினும் தன்னுடைய இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் சொல்லி வரும் ரஜினி, சில சர்ச்சை கருத்துக்களைக்  கூறி பாஜக ஆதரவாளர் என்ற பெயரையும் எடுத்துள்ளார்.தற்போது ரஜினியின் மக்கள் மன்றத்தினர்   கட்சி தொடங்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

amitabh

இந்நிலையில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்,  ‘சிரஞ்சீவியை அரசியலுக்கு வர வேண்டாம் 
 என்றேன் . ஆனால் அவர் கேட்கவில்லை. அதே அறிவுரையை இப்போது ரஜினிகாந்துக்கு சொல்கிறேன்’ என்றார். 

chiranjeevi

முன்னதாக ரஜினியின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சிரஞ்சீவி, ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது 
 

Most Popular

சாதித்த இ.பி.எஸ் அரசு: 3 ஆண்டுகளாக தேசிய விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக தமிழக பொருளாதார வளர்ச்சி விகிதம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது என்பதை காட்டும் வகையில் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள்...

மூணாறு நிலச்சரிவில் இதுவரை 8 பேர் பலி !

தென் மேற்கு பருவமழையால் கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. அதன்படி கேரள மாநிலம் இடுக்கி...

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு பல்வேறு நிதியுதவியும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. சமீபத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை...

வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன் தற்கொலை

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன்(54) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்தமாதம் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவர், வாழ பிடிக்கல்லை என்று கடிதம்...