Home தொழில்நுட்பம் சியோமி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்கியது

சியோமி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்கியது

சியோமி நிறுவனத்தின் நான்கு கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

மும்பை: சியோமி நிறுவனத்தின் நான்கு கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் தற்போது சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தான் விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன. அதிலும் குறிப்பாக சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் தான் இந்த ஆண்டு தீபாவளி விற்பனையில் அதிகம் விற்கப்பட்டது. இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இதன் முதல் விற்பனை இன்று (நவ.23) மதியம் 12.00 மணி முதல் தொடங்கியது.

redmi

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.26 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்

– அட்ரினோ 509 GPU

– 4 ஜி.பி. ரேம்

– 64 ஜி.பி. மெமரி

– மெமரியை நீட்டிக்கும் வசதி

– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்

– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

– 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல்,

– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0

– 2 எ.ம்பி. இரண்டாவது செல்ஃபி கேமரா

– விரல்ரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

redmi

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு ஆகிய நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.13,999 என்றும், 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அறிமுக சலுகையாக புதிய ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் ஃபிரைடே சிறப்பு விற்பனையில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியன்ட் விலை ரூ.12,999 என்றும், 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியன்ட் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் குறிப்பிட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும்போது கூடுதலாக ரூ.5,00 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்துவோருக்கு ரூ.2,400 வரை உடனடி தள்ளுபடி மற்றும் அதிகபட்சம் 6000 ஜிபி அதிவேக 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

தனியார் பேருந்து – ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து… மூதாட்டி உள்பட 2 பேர் பலி…

கோவை கோவையில் அதிகாலையில் தனியார் பேருந்தும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

துப்பாக்கிச்சூடு வழக்கு: நாளை ஆஜராவாரா நடிகர் ரஜினிகாந்த்?

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம்...

சிறையில் உள்ள இளவரசி பிப்ரவரி 5 ஆம் தேதி விடுதலை!

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள இளவரசி அடுத்த மாதம் விடுதலையாகிறார். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் இளவரசி பிப்ரவரி...

“கட்டு கட்டா பணம் இருந்தாதான் கட்டிலுக்கு வரலாம்” -வரதட்சணை குறைஞ்சதால் ஒரு கணவன் பண்ண வேலை .

ஒரு பெண்ணை அடித்து, உதைத்து , வரதட்சணை கொடுமை செய்த கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தார்கள் .
Do NOT follow this link or you will be banned from the site!