சியோமி கோ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

ரெட்மி கோ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதியை சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

மும்பை: ரெட்மி கோ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதியை சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

சியோமி நிறுவனம் முதன் முறையாக ஆண்ட்ராய்டு கோ எடிஷன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவிருக்கிறது. அந்த ஸ்மார்ட்போனுக்கு ரெட்மி கோ ஸ்மார்ட்போன் என்று அந்நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. இந்தியாவில் மார்ச் 19-ஆம் தேதி இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிளாக் மற்றும் புளு என இருவிதமான நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் 75 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.5,240) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி கோ சிறப்பம்சங்களாக 5.0 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ கோ எடிஷன்), டூயல் சிம் ஸ்லாட், 8 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி ஃபிளாஷ், 5 எம்.பி செல்ஃபி கேமரா, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 4.1, 3000 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளது.

Most Popular

சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுங்கள் : முக ஸ்டாலினுக்கு கு.க செல்வம் கடிதம்

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம். திமுக தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வரும் இவர் திமுக தலைமையிடத்துக்கு நெருக்கமானவர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், மேற்கு...

கொரோனா சிகிச்சைக்கு ரூ. 7 லட்சம் கட்டணம் : தனியார் மருத்துவமனைக்கு அரசு அனுமதி தற்காலிக ரத்து!

தமிழகத்தில் முதற்கட்டமாக கொரோனா சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வந்தது. ஆனால் நாளாக நாளாக தீவிரம் அதிகரித்து வந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை க்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் 112 தனியார்...

ஆன்லைன் ரம்மிக்கு அடிமை… கடன் வாங்கி விளையாட்டு!- திருச்சி காவலர் எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான காவலர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் வாங்கி விளையாடியதால், கடன் கொடுத்தவர்கள் கேட்டதால் மனஉளைச்சலில் இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது. திருச்சி மாவட்டம், திருப்பாய்துறை,...

“அம்மா அந்த இடத்துல வலிக்குது” பக்கத்து வீட்டுக்காரரால் பலாத்காரம் செய்யப்பட்ட நாலு வயது சிறுமியின் அழுகையால் அலறிய அப்பார்ட்மெண்ட்

மும்பை நாக்பாடா பகுதியில் ஒரு நாலு வயது சிறுமியை ஒரு அம்மா வீட்டில் தனியே விட்டு விட்டு சென்ற வாரம் வேலைக்கு சென்றுள்ளார் ,அந்த சிறுமிக்கு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்துள்ளார் . அப்போது...