Home தொழில்நுட்பம் சியோமி எம்ஐ 8 லைட் மற்றும் எம்ஐ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம்

சியோமி எம்ஐ 8 லைட் மற்றும் எம்ஐ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம்

சியோமி நிறுவனம் எம்ஐ 8 லைட் மற்றும் எம்ஐ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

டெல்லி: சியோமி நிறுவனம் எம்ஐ 8 லைட் மற்றும் எம்ஐ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

சீனாவில் சியோமி நிறுவனம் எம்ஐ 8 லைட் மற்றும் எம்ஐ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் வெவ்வேறு விதமாக செல்ஃபிக்களை எடுக்க ஏதுவாக வித்தியாசமான நிறங்களை பிரதிபலிக்கும். இத்துடன் கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ், பின்புறம் விரல் ரேகை சென்சார், 3350 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன், குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பம் ஆகியவை இதில் வழங்கப்பட்டுள்ளது.

சியோமி எம்ஐ 8 லைட் சிறப்பம்சங்கள்:

– 6.26 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. + 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm பிராசஸர்

அட்ரினோ 512 GPU

– 4 ஜிபி  / 6 ஜிபி ரேம்

– 64 ஜிபி மெமரி

– 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI

டூயல் சிம் ஸ்லாட்

– 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், 1.4μm பிக்சல், f/1.9

– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல்

– 24 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX576 சென்சார், 1.8um பிக்சல்

கைரேகை சென்சார்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி

– 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி

குவால்காம் குவிக் சார்ஜ் 3.0

சியோமி எம்ஐ 8 லைட் ஸ்மார்ட்போன் அரோரா புளு, சன்செட் கோல்டு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. சியோமி எம்ஐ 8  லைட் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 1399 யுவான் இந்திய மதிப்பில் ரூ.14,835, 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 1699 யுவான் இந்திய மதிப்பில் ரூ.18,020 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1999 யுவான் இந்திய மதிப்பில் ரூ.21,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி எம்ஐ 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் பிரெஷர் சென்சிட்டிவ் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கைவிரலை திரையில் வைத்ததும், ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யும் இந்த தொழில்நுட்பம் Mi 8 மாடலில் உள்ளதை விட 29% வரை வேகமாக இயங்குகிறது.

சியோமி எம்ஐ 8 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.21 இன்ச் 2248×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. + 18:7:9 AMOLED டிஸ்ப்ளே

– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 10nm பிராசஸர்

அட்ரினோ 630 GPU

– 6 ஜிபி  / 8 ஜிபி ரேம்

– 128 ஜிபி மெமரி

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI

டூயல் சிம் ஸ்லாட்

– 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், 1.4μm பிக்சல், f/1.8, OIS

– 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல், f/2.4, 1.0μm பிக்சல்

– 20 எம்.பி. செல்ஃபி கேமரா

ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக், பிரெஷர் சென்சிட்டிவ் கைரேகை சென்சார்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி

– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

குவிக் சார்ஜ் 4 பிளஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

சியோமி எம்ஐ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் சன்செட் கோல்டு, பிளாக் மற்றும் டிரான்ஸ்பேரன்ட் டைட்டானியம் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 3199 யுவான் இந்திய மதிப்பில் ரூ.33,945 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 3599 யுவான் இந்திய மதிப்பில் ரூ.38,192 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

அகிலேஷ் கட்சி வேட்பாளரை தோற்கடிக்க பா.ஜ.க.வுக்கு கூட ஓட்டு போடுவோம்… மாயாவதி ஆவேசம்

மாநிலங்களை உறுப்பினருக்கான தேர்தலில் அகிலேஷ் யாதவ் கட்சி (சமாஜ்வாடி) வேட்பாளரை தோற்கடிக்க பா.ஜ.க.வுக்கு கூட ஓட்டு போடுவோம் என மாயாவதி தெரிவித்தார். உத்தர பிரதேசத்திலிருந்து காலியாக...

மேற்கு வங்கத்தில் அல் கொய்தா போன்ற தீவிரவாத குழுக்கள் தடம் பதிக்கின்றன.. கவர்னர் அதிர்ச்சி தகவல்

மேற்கு வங்கத்தில் அல் கொய்தா போன்ற தீவிரவாத குழுக்கள் தடம் பதிக்கின்றன என அம்மாநில கவர்னர் ஜகதீப் தங்கர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க...

மின் கட்டணத்தை குறைக்க நிறுவனங்கள் தயார்… ராஜ் தாக்கரே தகவல்

மகாராஷ்டிராவில் மின் கட்டணத்தை குறைக்க அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் தயாராக உள்ளதாக நவ்நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்தார். மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா...

கர்நாடகாவில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை விற்பனை செய்பவரின் வாழ்க்கை மாற்றிய ஒரே ஒரு போட்டோ

கர்நாடகாவில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை விற்பனை செய்பவரின் வாழ்க்கையை ஒரே ஒரு புகைப்படம் மாற்றியுள்ளது. பெங்களூருவில் சாலையோரத்தில் மருத்துவ மரக்கன்றுகளை விற்பனை செய்து வருபவர் ரேவண்ணா சித்தப்பா....
Do NOT follow this link or you will be banned from the site!