Home சினிமா சிம்புவை பஞ்சராக்கிய நண்பர்கள் | டென்ஷனான டி.ஆர்..! 

சிம்புவை பஞ்சராக்கிய நண்பர்கள் | டென்ஷனான டி.ஆர்..! 

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்கிற அடைமொழி, நடிப்பு திறமை, தொழில் நுட்ப அறிவு, இசை, நடனம், பாடல், இயக்கம் என்று அப்பாவை போலவே சினிமாவின் சகல துறைகளிலுமே சிம்புவின் திறமை கொண்டாடபட வேண்டியது தான். ஆனால், ஒவ்வொரு முறையும் சிம்புவின் பட ரிலீஸின் போது தயாரிப்பாளர் பஞ்சாயத்து  வைக்காமல் படங்கள் ரிலீஸானதில்லை என்கிற வரலாற்று பக்கங்கள் எப்போதுமே சிம்புவின் திரையுலக வாழ்க்கையின் கருப்பு பக்கங்கள் தான். 

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்கிற அடைமொழி, நடிப்பு திறமை, தொழில் நுட்ப அறிவு, இசை, நடனம், பாடல், இயக்கம் என்று அப்பாவை போலவே சினிமாவின் சகல துறைகளிலுமே சிம்புவின் திறமை கொண்டாடபட வேண்டியது தான். ஆனால், ஒவ்வொரு முறையும் சிம்புவின் பட ரிலீஸின் போது தயாரிப்பாளர் பஞ்சாயத்து  வைக்காமல் படங்கள் ரிலீஸானதில்லை என்கிற வரலாற்று பக்கங்கள் எப்போதுமே சிம்புவின் திரையுலக வாழ்க்கையின் கருப்பு பக்கங்கள் தான். 

simbhu

சரி… பழைய கதையெல்லாத்தையும்  மறந்துடுவோம்.. விஷயம் இப்போ அது கிடையாது. கம்பிங் பேக் டூ த பாயிண்ட்.. மணிரத்னத்தின் படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு சிம்புவுக்கு ஞானோதயம் வந்து, அதன் பிறகு தயாரிப்பாளர்களின் குட் புக்கில் இடம் பிடித்து குட் பாய் கணக்கில் ஷூட்டிங் வந்து போய் கொண்டிருந்தார். அதன்பிறகு பழைய ரெண்டாவது காதலி ஹன்சிகாவுடன் ‘மஹா’ படத்தில் டூயட் பாடும் அளவிற்கு சிம்புவின் சினிமா சின்சியாரிட்டியை திரையுலகம் கொண்டாடியது. 

str

கடந்த ஒரு வார காலமாக, சிம்பு நடிக்கும் ‘மாநாடு படம் ரிலீசாகாது’, சிம்பு ‘சனி ஞாயிறுகளில் ஷூட்டிங் வரமாட்டார்’ என்று திரும்பும் இடங்களில் எல்லாம் சிம்புவைப் பற்றிய சர்ச்சையாகவே எழுந்து, திரையுலகில் சிம்புவின் தலைக்கணம் பற்றி ‘ச்ச்’ கொட்ட வைத்தது.

களத்தில் இறங்கி என்னாச்சு சிம்புவிற்கு என்று விசாரித்தால், வெளிவருகிற தகவல்கள் எல்லாமே அதிர்ச்சி ரகமாக இருக்கிறது. சிம்புவின் உதவியாளர்கள் கம் நெருங்கிய நண்பர்களான தீபன் பூபதி, தேவராஜ்  என இருவரும் தான் சிம்புவிற்கு எல்லாமுமாய் இருந்து வந்தார்கள். எந்த படம், எப்போ ஷூட்டிங், எவ்வளவு சம்பளம் என்பதில் ஆரம்பித்து சிம்புவின் கால்ஷீட் பார்ப்பதும் இவர்கள் தான். 

boopathi and devaraj

சிம்புவின் பெயரைச் சொல்லி பல தயாரிப்பாளர்களிடம் கால்ஷீட் தருவதாகச் சொல்லி அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார்கள். இதெல்லாமே சிம்புவுக்கு தெரியாது. சிம்புவின் காதுக்கே விஷயம் தெரியாமல் தயாரிப்பாளர்களும் சிம்பு படம் பண்ணுவதாக இவர்களிடம் அட்வான்ஸ் பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள்.இரவு முழுவதும் பார்ட்டியில் குடித்து விட்டு, அடுத்த நாள் ஷூட்டிங் இருந்தால், ‘சிம்பு இன்னைக்கு ஷூட்டிங் வரமாட்டார்’ என்று சிம்புவின் பெயரைக் தொடர்ந்து பஞ்சராக்கியிருக்கிறார்கள். இவர்களால் தான் அப்பாவி சிம்புவின் பெயர் தொடர்ந்து கெடுகிறது என்று நலம் விரும்பிகள் சிம்புவிடம் எடுத்துச் சொன்னார்களாம்.

இதன் பிறகு தான் எல்லா அதிரடியுமே அரங்கேறியது. சும்மாவே தலையை சிலுக்கிக் கொண்டு வார்த்தைகளில் சலங்கை கட்டி ஆடும் டி.ஆர். காதுக்கு விஷயத்தை சிம்பு சொல்ல, தனது பாணியில் தீபன் பூபதியையும், தேவராஜையும் துரத்திவிட்டார் டி.ஆர்.

சிம்பு ஃபேமிலி இப்போது சிம்புவின் கால்ஷீட்டை டி.ஆரும், அவரது மனைவியும் பார்த்து கொள்கிறார்கள். வழக்கம் போல டி.ஆர். சிம்புவின் ஜாதக கட்டங்களை வைத்து சோழி உருட்ட ஆரம்பித்திருக்கிறார். சென்ற 18ம் தேதியோடு சிம்பு திரையுலகில் அடியெடுத்து வைத்து 35 ஆண்டுகள் ஆகிறதாம். அன்றோடு சிம்புவைச் சுற்றியிருந்த தீய சக்திகள் எல்லாமே துரத்தப்பட்டு விட்டது.. இனி சிம்புவுக்கு எப்போதுமே ஏறுமுகம் தான் என்று சொல்லிவருகிறார் டி.ஆர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘500க்கும் கீழ் குறைந்தது கொரோனா பலி’ முழு விவரம் வெளியீடு!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இருப்பினும் தீபாவளி...

‘பாஸான 70% பேர் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதியவர்கள்’: கல்வியாளர்கள் அதிருப்தி!

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான...

விபத்தில் இறந்த ராணுவ வீரர் உடல் காஞ்சிபுரம் வந்தடைந்தது!

அசாமில் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஏகாம்பரம் உடல் சொந்த ஊரான காஞ்சிபுரம் வந்தடைந்தது. காஞ்சிபுரம் வெள்ளை...

“கொட்டும் ரத்தத்தோடு ,முனகல் சத்தத்தோடு …”-பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கிடந்த பெண் நாய்

மும்பையின் போவாய் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் ‘நூரி’ என்ற எட்டு வயது பெண் நாய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கிடந்தது .
Do NOT follow this link or you will be banned from the site!