Home அரசியல் சிபிஐ விசாரணைக்கு ஆளாகியுள்ள முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சிபிஐ விசாரணைக்கு ஆளாகியுள்ள முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

சிபிஐ விசாரணைக்கு ஆளாகியுள்ள முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 3120 கோடி ரூபாய் டெண்டர்களை தனது சம்பந்திக்கு கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்கிறேன்.

தான் பொறுப்பு வகிக்கும் நெடுஞ்சாலைத்துறையில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு டெண்டர்களை தனது சம்பந்திக்கும், சம்பந்தி பார்ட்னராக இருக்கும் நிறுவனங்களுக்கும் அளித்தது தொடர்பாக முதலமைச்சரின் மீது 13.06.2018 அன்றே லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் அந்த புகாரினை முறையாக விசாரிக்காமல் – என் சம்பந்தி அரசு கான்டிராக்ட் எடுக்கக்கூடாதா? என்றெல்லாம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணவத்துடன் வாதிட்டுக் கொண்டிருந்தார். லஞ்ச ஊழல் தடுப்புத்துறையில் பாலியல் புகாருக்கு உள்ளான ஐ.ஜி.யை வைத்தே அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் புகார் மீதான முதற்கட்ட விசாரணையை நடத்த வைத்து, “டெண்டர் விட்டத்தில் ஊழல் ஏதும் நடைபெறவில்லை” என்று உயர்நீதிமன்றத்திற்கே அறிக்கை கொடுக்க வைத்து லஞ்ச ஊழல் தடுப்புத் துறையையே கேலிக்கூத்தாக்கினார்.

தனக்குத்தானே நீதிபதியாகிக் கொண்ட முதலமைச்சரைப் பார்த்து நாடே வெட்கப்பட்டது. இவ்வளவும் போதாது என்று அரசு தலைமை வழக்கறிஞரையும் அவ்வாறே வாதாட வைத்து முதலமைச்சர் பதவிக்குரிய கண்ணியத்தை குறைத்து விட்டார்.

இந்திய முதலமைச்சர்கள் வரலாற்றில் சம்பந்திக்கு ஒப்பந்தம் – அதுவும் தான் வகிக்கும் துறையிலேயே கொடுத்தது முதலமைச்சர் திரு பழனிசாமி மட்டும்தான் என்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தலைகுனிவு. அதுமட்டுமின்றி உலக வங்கி நிதி அளித்துள்ள ஊழல் எதிர்ப்புவிதிகளை எல்லாம் அப்பட்டமாக மீறி, தமிழகத்திற்கு சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்திய முதலமைச்சரும் இவரே என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஆகவே சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி உடனடியாக விலகி சுதந்திரமான ஊழல் விசாரணைக்கு வழி விட வேண்டும் என்றும், ஆதாரங்கள் அழிப்பிற்கு இடமளித்து விடாமல் காலதாமதமின்றி சி.பி.ஐ. இந்த டெண்டர் ஊழல் வழக்கின் ஆவணங்களைப் பெற்று விசாரணையை துவங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

3120 கோடி ரூபாய் ஊழல் புகாரில் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் முதலமைச்சர் பதவி விலக மறுத்தால், மாண்புமிகு தமிழக ஆளுநர் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணைக்கு ஆளாகியுள்ள முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மீண்டும் குறையும் கொரோனா : சுகாதாரத்துறையின் ரிப்போர்ட்!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் இதுவரை 47,85,44,114 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில்...

ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டி: பெல்ஜியத்திடம் போராடி இந்திய அணி தோல்வி!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பெல்ஜியம் அணியிடம் தோல்வியை தழுவியது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆண்கள் ஹாக்கி போட்டி இன்று காலை...

“அனைவரையும் அரவணைத்து நல்லாட்சி நடத்திய நாயகரான தீரன் சின்னமலை” – டிடிவி தினகரன்

மாவீரன் தீரன் சின்னமலை 216ம் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே மேலப்பாளையத்தில் 1756ல்...

விரைவில் பள்ளிகளை திறக்க வாய்ப்பு – தமிழிசை சௌந்தரராஜன் தகவல்!

புதுச்சேரியில் விரைவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். நாடெங்கிலும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பின்...
- Advertisment -
TopTamilNews