Home சினிமா சின்மயி லிஸ்ட்டில் சிக்கிய பிரபல பாடகர்..!

சின்மயி லிஸ்ட்டில் சிக்கிய பிரபல பாடகர்..!

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பிரபலங்கள் குறித்த பாடகி சின்மயி-யின் பட்டியலில் பிரபல பின்னணி பாடகர் கார்த்திக்கும் இணைந்துள்ளனர்.

சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பிரபலங்கள் குறித்த பாடகி சின்மயி-யின் பட்டியலில் பிரபல பின்னணி பாடகர் கார்த்திக்கும் இணைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் பிரபலங்கள் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதில் கவிஞர் வைரமுத்து, ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண் ஆகிய வரிசையில் பாடகர் கார்த்திக் இணைந்துள்ளார்.

karthik

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், பெண் ஒருவர் பாடகர் கார்த்தியால் பாலியல் சீண்டலுக்கு ஆளானது குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் பாதிக்கப்பட்ட பெண், ‘சில ஆண்டுகளுக்கு முன் கார்த்திக்கோடு பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டேன்.

அப்போது அவர் என் உடலை பற்றியே பேசிக் கொண்டு, என்னை தொட முயன்றார். என்னை நினைத்துக் கொண்டு சுய இன்பம் கண்டதாக கூறினார். அது எனக்கு அசவுகர்யத்தை ஏற்படுத்தியது. அதன் பின் அவர் அருகில் செல்லவே எனக்கு தயக்கமாக இருந்தது. பல பாடகிகள் கார்த்திக்கின் சில்மிஷங்கள் குறித்து என்னிடம் கூறியுள்ளனர். அவருக்கு திரையுலகில் செல்வாக்கு இருப்பதால் வெளியே சொல்ல அனைவரும அஞ்சுகின்றனர். என் பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை ரீட்வீட் செய்துள்ள பாடகி சின்மயி, நேற்று தான் கார்த்திக்குடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆனாலும், பாதிக்கப்பட்டவரை நான் நம்புகிறேன். மன்னித்துவிடுங்கள் உங்கள் நேரம் முடிந்துவிட்டது’ என்று சின்மயி தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

விரைவில் கட்சி அப்டேட்… ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யும் முறை அறிமுகம்

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,...

கூட்டணியை மாற்றும் ராமதாஸ்? அதிமுக அரசை சாடியதால் சர்ச்சை

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு...

ஒரு மணி நேர மழை, தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை!- கமல்ஹாசன்

தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் பருவமழை தொடங்கவிருக்கிறது. பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல...

மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளி கைது; நகை, பணம் பறிமுதல்

மதுரையில் நகைக்காக மூதாட்டி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு குற்றவாளியை போலீசார் கைதுசெய்தனர். மதுரை பழங்காநத்தம் நேரு நகர் பாலாஜி தெருவை சேர்ந்தவர் பஞ்சவர்ணம்.
Do NOT follow this link or you will be banned from the site!