Home அரசியல் சிந்தியா புண்ணியத்தால்..... நான்காவது முறையாக மத்திய பிரதேச முதல்வரானார் மாமாஜி....

சிந்தியா புண்ணியத்தால்….. நான்காவது முறையாக மத்திய பிரதேச முதல்வரானார் மாமாஜி….

மத்திய பிரதேசத்தில் நேற்று இரவு சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக பதவியேற்றார். நான்காவது முறையாக அவர் முதல்வராக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2018ல் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் குறுகிய வெற்றி வித்தியாசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனால் அந்த கட்சியின் முக்கிய இளம் தலைவராக இருந்த ஜோதிராத்திய சிந்தியாவுக்கும், முதல்வர் கமல் நாத்துக்கும் இடையே மோதல் இருந்தது வந்தது. ஒரு கட்டத்தில் இந்த வெளிப்படையாக தெரிந்தது. இந்நிலையில் யாரும எதிர்பாராத வண்ணம் சிந்தியா பா.ஜ.க.வில் இணைந்தார். மேலும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து கமல் நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. கமல் நாத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜோதிராதித்ய சிந்தியா

இதனையடுத்து மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னரிடம் பா.ஜ.க வேண்டுகோள் விடுத்தது. போபாலில் நேற்று பா.ஜ.க. அலுவலகத்தில் நடைபெற்ற பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாமாஜி என அன்பாக அழைக்கப்படும் சிவ்ராஜ் சிங் சவுகான் அந்த கட்சியின் சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கொரோனா வைரஸ் காரணமாக டெல்லியிலிருந்து போபாலுக்கு அந்த கட்சி தலைவர்கள் யாரும் செல்லவில்லை. அதேசமயம், அந்த கட்சியின் மத்திய பார்வையாளர்கள் அருண் சிங் மற்றும் வினய் சஹஸ்ரபுத்தே வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து போபாலில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று இரவு 9 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு மத்திய பிரதேச கவர்னர் லால்ஜி டான்டன் முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆட்சியை இழந்த 15 மாதங்களுக்கு பிறகு சிவ்ராஜ் சிங் சவுகான் 4வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.

Most Popular

மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது எடியூரப்பா அரசு… காங்கிரஸ் குற்றச்சாட்டு

மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் பாதையை எடியூரப்பா அரசு தேர்ந்தெடுத்துள்ளது என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டினார். கர்நாடகாவில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா...

வேளாண் மசோதாக்களை திரும்ப அனுப்புங்க…. குடியரசு தலைவரை சந்தித்து குலாம் நபி ஆசாத் வேண்டுகோள்..

காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் நேற்று குடியரசு தலைவரை சந்தித்து வேளாண் மசோதாக்களை மத்திய அரசுக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்றத்தை உணர்ச்சிகளால் நடத்த முடியாது… பா.ஜ.க., காங்கிரசுக்கு தேவகவுடா அட்வைஸ்…

நாடாளுமன்றத்தை உணர்ச்சிகளால் நடத்த முடியாது. இரு தேசிய கட்சிகளும் நாடாளுமன்றத்தை நடத்துவதற்கும், விவசாய துறையின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு புரிதலுக்கு வர வேண்டும் என தேவகவுடா அறிவுறுத்தியுள்ளார்.

நான் சில அமைச்சரா அல்லது சிறந்த எதிர்க்கட்சி தலைவரா? காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த பாலிவுட் நடிகை

பஞ்சாப் காங்கிரசார் தனது உருவ பொம்மையை எரித்தற்கு, நான் சில அமைச்சரா அல்லது சிறந்த எதிர்க்கட்சி தலைவரா? என்று அவர்களுக்கு நடிகை கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார்.
Do NOT follow this link or you will be banned from the site!