Home இந்தியா சித்தாந்தங்களை கடைப்பிடிப்பதால் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர்- பிரதமர் மோடி

சித்தாந்தங்களை கடைப்பிடிப்பதால் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர்- பிரதமர் மோடி

பாஜகவின் சித்தாந்தங்களை கடைப்பிடிக்கும் ஒரே காரணத்துக்காக மேற்கு வங்காளத்தில் அரசியல் விரோதத்தால் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்தார். 

சித்தாந்தங்களை கடைப்பிடிப்பதால் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர்- பிரதமர் மோடி

பாஜகவின் சித்தாந்தங்களை கடைப்பிடிக்கும் ஒரே காரணத்துக்காக மேற்கு வங்காளத்தில் அரசியல் விரோதத்தால் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்தார். 

மக்களவை தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் அபார வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனால் மீண்டும் பிரதமராக மோடி வரும் 30 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். தனி பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்று அரியணையில் ஏறிய பிரதமருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இதையடுத்து வாரணாசியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,  “வாரணாசியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். மக்கள் நம்பிக்கை வைத்த காரணத்தினால் தான் கேதார்நாத் சென்று நிம்மதியாக தியானம் மேற்கொண்டேன். பாஜாக தோல்வியை தழுவும் என அரசியல் நோக்கர்களின் கருத்துக்கணிப்பை இந்த தேர்தல் பொய் ஆக்கியுள்ளது. இந்த நாடு என்னை பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், என்றென்றும் நான் உங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும் சேவகனாகவும் இருப்பேன். உங்கள் பணியே எனக்கு முதன்மையானது. என்னை எதிர்த்து இந்த வாரணாசி தொகுதியில் போட்டியிட்டவர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பாஜக, இந்திமொழி பேசும் மாநில மக்களுக்கான கட்சி என்று சில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. பாஜகவின் சித்தாந்தங்களை கடைப்பிடிக்கும் ஒரே காரணத்துக்காக மேற்கு வங்காளத்தில் அரசியல் விரோதத்தால் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர் ” என தெரிவித்தார்.
 

சித்தாந்தங்களை கடைப்பிடிப்பதால் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர்- பிரதமர் மோடி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

இதுவரை தமிழ்நாட்டில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள் என தெரியுமா? – அரசு வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று...

“பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு பணப்பலன்களுக்கு வேட்டு வைத்த மத்திய அரசு”

1961ஆம் ஆண்டு மகப்பேறு பயன் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் முழு ஊதியம் பணப்பலனாக வழங்க வகை செய்யப்பட்டது. இந்நிலையில் 2020ஆம் ஆண்டு இந்தச்...

“கணவனை கொலை செய்வது எப்படி”-கூகுளில் தேடிய மனைவி -கணவனுக்கு நேர்ந்த கொடுமை

கூகுள் மூலம் கணவனை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர் . மத்திய பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கெதிபூர்...

இந்தியாவிலேயே முதன்முறையாக… அழிந்துவரும் மரங்களை பாதுகாக்க “மர அறுவைச் சிகிச்சை நிபுணர்கள்”

மக்களையும் பூமியையும் காப்பாற்றுவதற்குகு கிடைத்த மிக முக்கியமான ஆயுதம்தான் மரம். மனிதனுக்கு உயிர் எந்தளவு முக்கியமோ, அதேபோல் அந்த மனிதன் வாழ்வதற்கு மரமும் முக்கியம். ஆனால் அந்த மரங்களைப் போற்றி...
- Advertisment -
TopTamilNews