Home உலகம் சிட்னி நகரை சூழ்ந்த பனி... விமான சேவை பாதிப்பு 

சிட்னி நகரை சூழ்ந்த பனி… விமான சேவை பாதிப்பு 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று ஏற்பட்ட கடுமையான பனிமூட்டத்தால் சாலைப்போக்குவரத்து மட்டுமின்றி விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று ஏற்பட்ட கடுமையான பனிமூட்டத்தால் சாலைப்போக்குவரத்து மட்டுமின்றி விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

சிட்னி நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் காலை முதல் கடுமையான பனிப்பொழிவு நிலவியது.இதனையடுத்து பனியால் சூழ்ந்த பல கட்டிடங்கள், வெண்ணிற போர்வை கொண்டு மூடப்பட்டதைப் போலக் காட்சியளித்தன. சிட்னிக்கு வர வேண்டிய விமானங்களும், அங்கிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் பனிமூட்டம் காரணமாகத் தாமதமடைந்தன அல்லது ரத்தாயின. மற்ற சில விமானங்கள், வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன.

fog

சிட்னியில் புகழ்பெற்ற துறைமுக பாலத்தையும் பனிமூட்டம் சூழ்ந்தது. இதனால்  கப்பல் சேவைகளையும் பாதித்தது. விபத்து ஏதும் நேராமல் இருக்க கப்பல்கள், உரத்த சங்கொலியோடு எச்சரிக்கையாகச் செலுத்தப்பட்டன. மேலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின. மதிய நேரத்திற்கு பிறகு பனிமூட்டம் குறைந்ததாகவும், தற்போது விமானச் சேவை வழக்க நிலைக்கு திரும்பிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews