Home உலகம் சிங்கப்பூர் - டெல்லி விமானம் 17 மணிநேரம் தாமதம் ! மன்னிப்பு கேட்க சொன்ன பயணிக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு !

சிங்கப்பூர் – டெல்லி விமானம் 17 மணிநேரம் தாமதம் ! மன்னிப்பு கேட்க சொன்ன பயணிக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு !

பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு விமானம் புறப்பட தாமதம் ஆனதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என பயணி ஒருவர் பதிவிட்டதற்கு சமூகவலைதளவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு விமானம் புறப்பட தாமதம் ஆனதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என பயணி ஒருவர் பதிவிட்டதற்கு சமூகவலைதளவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து புதுடெல்லிக்கு சென்ற விமானம் கடந்த வாரம் 17 மணிநேரம் தாமதமாக சென்றது. மோசமான வானிலை காரணமாக விமானம் புறப்படும் நேரம் தள்ளி போடப்பட்டது. மாலை 6 மணிக்கு விமானம் புறப்பட இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் ஆகியும் பிரச்சனையை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் இயந்திரத்தில் கோளாறு இருப்பதை உறுதி செய்த விமான பைலட்டுகள் பயணிகள் பாதுகாப்பு கருதி புறப்படும் நேரத்தை மாற்றிய அமைத்தனர்.

flight

மறுநாள் காலை 7.30 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த நிலையில் சில பயணிகள் உடல்நலம் சரியில்லை எனக் கூறி விமானத்தில் இருந்து வெளியேறினர். இதனால் மீண்டும் தாமதம் ஆனது. இது குறித்து தெளிவாக விளக்கம் அளித்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீண்டும் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்வதாக தெரிவித்தது. ஆனாலும் இந்த தாமத நேரத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இன்றி அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தது. 

fb

இதில் பயணம் செய்த ஒரு பயணி விமானம் தாமதம் ஆனதால் தன்னுடைய மகன் விருது வாங்கும் நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை எனக் கூறி தேசிய விமான ஆணையத்தின் பேஸ்புக்கில் சென்று விமான நிறுவனம் மீது புகார் அளித்துள்ளார். விமான நிறுவனம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் விமானக் கட்டணத்தை திருப்பித் தரவேண்டும் என்றும் கோரியுள்ளார்.  இந்த பதிவை பார்த்த மற்ற நெட்டிசன்கள் பலர் பாதுகாப்பு உறுதி என்பது முதன்மையானது என்றும், இதற்காக முன்னுரிமை அளிப்பதில் விமான நிறுவனம் சரியாக செயல்பட்டதாகவும் கூறினர்.

Most Popular

பருவமழை தொடங்குவதால் ஈரோடு மாநகரில் தூர்வாரும் பணிகள் தீவிரம்

பருவமழை தொடங்குவதையொட்டி ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமையில் கூட்டம்...

தமிழக பாஜகவினரை மேலிடம் புறக்கணித்தது ஏன்? – அண்ணாமலை பேட்டி

ஈரோட்டில் தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் அண்ணாமலை...

கொரோனா காலத்திலும் மக்களுக்கு உதவி செய்ய கூட அனுமதி தராத இரக்கமற்ற அரசு அதிமுக ஆட்சி- ஸ்டாலின்

கரூர் மாவட்ட திமுக முப்பெரும் விழா காணொளி காட்சி வழியாக நடைபெற்றது. கரூர் நகரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், திமுகவின் 100 மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது....

பள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம்: 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிபேட்டையில் பள்ளி மாணவி(வயது16)யை கடத்திச்சென்று பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளைஞர்கள் இருவர் கைது செயப்பட்டுள்ளனர்.
Do NOT follow this link or you will be banned from the site!