Home அரசியல் சிகரெட் பாக்கெட்டில் குரூரமான படத்தை வெளியிட உத்தரவு! - ராமதாஸ் வரவேற்பு

சிகரெட் பாக்கெட்டில் குரூரமான படத்தை வெளியிட உத்தரவு! – ராமதாஸ் வரவேற்பு

சிகரெட் பாக்கெட்களில் முன்பு இருந்ததைக் காட்டிலும் மிகப் பெரிய அளவில் மிகக் குரூரமான படத்தை வெளியிட வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சிகரெட் பாக்கெட்களில் முன்பு இருந்ததைக் காட்டிலும் மிகப் பெரிய அளவில் மிகக் குரூரமான படத்தை வெளியிட வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மத்திய அரசின் அறிவிக்கையுடன் ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிக்கையில், “சிகரெட் பாக்கெட்களில் முன்பு இருந்ததைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் புகையிலை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளியின் படத்தை அச்சிட வேண்டும், அதனுடன் புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்தும் என்ற வாசகத்தை அச்சிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

tobacco

டாக்டர் ராமதாஸ் பதிவில், “நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி, புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது ‘புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்தும்’ என்ற வாசகமும், வழக்கத்தை விட குரூரமான எச்சரிக்கைப் படத்தையும் வரும் செப்டம்பர் முதல் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.

 

மாவட்ட செய்திகள்

Most Popular

”உணவு தானியங்கள் 100 %, சணல் பைகளில் பேக்கிங் – கட்டாயம்” மத்திய அரசு அதிரடி உத்தரவு !

உணவு தானியங்கள் 100 சதவீதமும், சர்க்கரை 20 சதவீதமும் சணல் பைகளில் மட்டுமே பேக்கிங் செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவிற்கு சணல் தொழில்துறையினர் வரவேற்பு...

திருப்பத்தூர்: தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள்

முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் 145-வது பிறந்தநாளையொட்டி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

வரப்போகிறது கடும் தண்ணீர் பஞ்சம் – நிபுணர்கள் எச்சரிக்கை

தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடுதல் இல்லாததால், உலகம் முழுவதும், வரும் 2025-ல் கடும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடப் போகிறது என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.உலகில்...

‘நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி விபத்து அதிர்ச்சியளிக்கிறது’ – டிடிவி தினகரன் பதிவு!

நாமக்கல்லில் புதிய அரசு மருத்துவ கல்லூரி கட்டடம் இடிந்தது அதிர்ச்சி அளிப்பதாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் ரூ.336 கோடி...
Do NOT follow this link or you will be banned from the site!